|
என்னை ஆள்வோன் சொன்ன
பணம் கால் உண்டு - என்னை ஆளும்
தலைவன் சொன்னபடி கொடுக்கவேண்டியது கால் பணம் உண்டு,
கொள்ளி ஆடைத் துண்டமும் ஒன்று உண்டு - கொள்ளி வைக்கும் போது
கொடுக்கும் ஆடைத் துண்டம் ஒன்றும் உண்டு, தந்து சுடுதி -
கொடுத்துவிட்டுச் சுடுவாயாக, அன்பால் அன்னவன்தான் படியாக
எனக்குத் தந்த - அன்போடு அவன் எனக்கு வாழ்நாட்படியாக
உணவின்பொருட்டுக் கொடுத்த, வாய்க்கரிசி யான் அளிப்பேன் - வாய்க்
கரிசியை மட்டும் யான் உனக்குக் கொடுப்பேன், அறிதி என்றான் - நீ
இதனைத் தெரிந்துகொள் என்றான் மன்னன்.
சந்திரமதி
புகலில்லை என்று கூறியபோது, மன்னன் எனக்குரிய
வாய்க்கரிசி மட்டும் கொடுக்கவேண்டாம்; என் தலைவனுக்குச் சேர
வேண்டிய பணமும் கொள்ளி யாடையும் கொண்டுவந்து கொடுத்து
விட்டுச் சுடுவதுதான் முறை' என்றான். 'நான் புலையனுக் கடிமை
யானவன்; என் காலைப் பற்றுவதுகூடத் தகாது; என்னாற் செய்யக்
கூடிய உதவி ஒன்றுமில்லையே! காலை விட்டுவிடு' என்றும் கூறினன்.
(40)
| |
சந்திரமதி
கழுத்தில் மங்கலநாண் காண்டல் |
| 1017. |
துஞ்சியமைந்
தனைஎடுத்துச் சுமந்து போந்து
சுடுவாரற் றிடுகாட்டிற் றோன்மே லேற்றிப்
பஞ்சுபடும் பாடுபடும் பாவி யேற்குப்
பணமேது கொள்ளிமுறிப் பாதி யேது
நெஞ்சுதளர்ந் தருவினையேன் வருந்தக் கண்டு
நீஇரங்காய் எனஇரந்து நிற்குங் காலை
வஞ்சிதிரு மணிமிடற்றில் வயங்கா நின்ற
மங்கலநாண் கண்டிறைவன் மறித்துஞ் சொல்வான். |
(இ
- ள்.) துஞ்சிய மைந்தனை எடுத்துச் சுமந்து போந்து - இறந்த
மைந்தனை எடுத்துச் சுமந்துகொண்டுவந்து, சுடுவாரற்று இடுகாட்டில்
தோள்மேல் ஏற்றி - சுடுகின்றவர் இல்லாமல் இடுகாட்டிலே தோள்மேல்
ஏற்றிக்கொண்டு, பஞ்சு படும் பாடு படும் பாவியேற்கு - பஞ்சுப்படுவது
போன்ற துன்பம் அடைகின்ற பாவியாகிய எனக்கு, பணம் ஏது கொள்ளி
முறிப் பாதி ஏது - பணம் ஏது கொள்ளித் துணித் துண்டமும் ஏது,
நெஞ்சு தளர்ந்து அருவினையேன் வருந்தக் கண்டும் - மனந்தளர்ந்து
அரிய பாவியாகிய யான் வருந்துதலைப் பார்த்திருந்தும், நீ இரங்காய்
என இரந்து நிற்கும் காலை - நீ இரங்கமாட்டேன் என்கிறாய் என இரந்து
கேட்டு நின்றபோது, வஞ்சி திரு மணி மிடற்றில் வயங்காநின்ற -
வஞ்சிக்கொடிபோன்ற அப் பெண்ணின் கழுத்தில் விளங்கிய, மங்கல
நாண் கண்டு இறைவன் மறித்துஞ் சொல்வான் - மங்கல நாணைப்
பார்த்து மன்னன் மேலும் பேசத் தொடங்கினான்.
அப்போது
சந்திரமதி 'என்னிலைமை நீ யறியவில்லைபோலும்!'
பணமும் கொள்ளி யாடையும் பாவி யான் எங்கிருந்து கொண்டுவந்து
|