பக்கம் எண் :


496

கொடுப்பேன்; நான் வருந்துவது கண்டும் மனமிரங்காது இவ்வண்ணம்
கூறுவது முறையோ? எவ்வாறேனும் சுடுவதற்கு உத்தரவு கொடு' என்று
வேண்டினள். அப்போது அவள் கழுத்திலுள்ள திருமங்கலிய நாண்
அரிச்சந்திரனுக்குத் தோன்றிற்று.
                                                    (41)

 
  அரிச்சந்திரன் 'மங்கல நாணைக் கொடு' எனக் கேட்டல்   
1018. நல்லைநல்லை அறச்சமர்த்தி நீயே கண்டேன்
   நன்னுதலா ரனைவரினும் இந்த்ர சாலம்
வல்லைவல்லை விறகுகளும் களவே செம்பொன்
   மங்கலநா ணுன்கழுத்தி லிருக்க வேதும்
இல்லைஎனச் சொல்லுவது சற்று மேலா
   திதனைஎனக் கீவாய்என் றியம்ப வேடர்
பல்லமுயிர் நிலைவாயிற் பட்ட மான்போற்
   பதைபதைத்துப் பைந்தொடியாள் பதறி வீழ்ந்தாள்.

       (இ - ள்.) நல்லை நல்லை அறச் சமர்த்தி நீயே கண்டேன் - நீ
மிகவும் நல்லவள் மிகவும் வல்லமையுடையவள் கண்டேன், நன்னுதலார்
அனைவரினும் இந்திர சாலம் வல்லை வல்லை - பெண்கள் எல்லோரினும்
இந்திரசாலத்தில் மிகவும் வல்லவள், விறகுகளும் களவே - நீ இங்கு
வைத்திருக்கும் விறகுகளும் களவிற் கொண்டுவந்தனவே, செம்பொன்
மங்கல நாண் உன் கழுத்தில் இருக்க - செம்பொன்னால் செய்யப்பட்ட
மங்கல நாண் உன் கழுத்தில் இருக்கும்போது, ஏதும் இல்லை எனச்
சொல்லுவது சற்றும் ஏலாது - ஏதும் பொருள் இல்லை என்று கூறுவது
சற்றும் பொருந்தாது, இதனை எனக்கு ஈவாய் என்று இயம்ப - இதனை
எனக்குக் கொடுப்பாயாக என்று சொன்ன போது, வேடர் பல்லம்
உயிர்நிலை வாயிற் பட்ட மான்போல், - வேடருடைய அம்பு
உயிர்நிலையிலே பட்டபோது துடிக்கும் மான்போல, பைந்தொடியாள்
பதைபதைத்துப் பதறி வீழ்ந்தாள் - பசுமையான வளையலை அணிந்த
பெண் பதைபதைத்து நடுங்கிப் பதறிக் கீழே விழுந்தாள்.

     மங்கல நாண் கண்டவுடன் அரிச்சந்திரன் அவளைக் கொடியவள்
என்றும், வஞ்சகமுடையவள் என்றும், திறமை மிக்கவள் என்றும்,
சொல்வல்லவள் என்றும் எண்ணித் துணிந்தான். 'எவ்வளவு உயர்ந்த
விலையுள்ள மங்கலநாண் உன் கழுத்தில் இருக்கிறது! பொருளில்லை என்று
நீ கூறுவது பொய்; அதனைக் கொடு' என்று கேட்டான். அப்போது
சந்திரமதி பதைத்து வீழ்ந்தாள். அவன் கூறிய மொழி அம்பு போலத்
தைத்தது. அவள் மான்போல விழுந்தான் என்க.
                                                    (42)

 
  புலையன் மங்கலநாண் கண்டமை குறித்துச்
        சந்திரமதி வருந்துதல்


           கலிவிருத்தம்
  
1019. வாடி னாடளர்ந் தாண்மலர் மாமுகம்
கோடி னாள்குலைந் தாள்அலைந் தாள்கொடும்