|
|
கேடி நான்வந்த
தென்றுகி லேசமெய்
மூடி னாணெடு மூச்செறிந் தாளரோ. |
(இ
- ள்.) வாடினாள் தளர்ந்தாள் மலர் மா முகம் கோடினாள் -
வாட்டம் அடைந்தாள் மனம் தளர்ந்தாள் மலர்போன்ற முகம் சாய்ந்தாள்,
குலைந்தாள் அலைந்தாள் - நிலைகுலைந்தாள் அங்கும் இங்கும் நில்லாது
வருந்தினாள், கொடும் கேடு இந்நாள் வந்ததென்று கிலேசம் மெய்
மூடினாள் - கொடுமையான கெடுதி இந்நாளில் வந்துவிட்டதே என்று
பெருங்கவலை உடம்பெல்லாம் மூடநின்றாள், நெடு மூச்சு எறிந்தாள்
அரோ - பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள்.
சந்திரமதி
தன் கழுத்திற் பூண்டிருந்த மங்கலநாண், தன்
கணவனையன்றி ஒருவருமே கண்டறியாத மங்கலநாண்; கடவுளாற்
கொடுக்கப்பட்டுத் தான் பிறக்கும்போதே உடன்றோன்றிய மங்கல
நாண்; ஒரு புலையனாற் காணப்பட்டது குறித்து மிகவும் வருந்தினாள்;
பெருமூச்சு விட்டாள்; மயக்கமெய்தினாள் என்க.
(43)
| 1020. |
அலைவி லாஅரிச்
சந்திரற் கல்லது
தொலைவில் யாவர்க்கும் தோற்றரு மங்கலம்
புலையன் காணவும் போதுவ தோவெனா
உலையின் மீது மெழுகொத் துருகினாள். |
(இ - ள்.) அலைவு இலா அரிச்சந்திரற்கு
அல்லது - அழிதல்
இல்லாத பெருமையுடைய அரிச்சந்திரனுக்குமட்டும் அல்லாமல், தொலைவு
இல் யாவர்க்கும் தோற்றரும் மங்கலம் - அழியா வரம்பெற்ற தேவர்க்கும்
காணமுடியாத மங்கலமானது, புலையன் காணவும் போதுவதோ எனா -
புலையன் காணும்படியான நிலை அடைந்துவிட்டதோ என்று,
உலையின்மீது மெழுகு ஒத்து உருகினாள் - உலைக்களத்தில் வைத்த
மெழுகைப்போல உருகி வருந்தினாள்.
சந்திரமதி புலம்பினாள் : 'என் கணவனாகிய அரிச்சந்திரமன்னனுக்
கல்லாமல் மற்றொருவர்க்கும் தோன்றாத என் மங்கலநாண், இன்று
புலையனாற் காணப்பட்டதே! இது பொல்லாத காலம்போலும்!' என்று
கூறினள்.
(44)
| 1021. |
இருள றுங்குணத்
தெந்தைக்கு நல்வர
மருளும் காலத் தரவணி வேணியான்
றிருவு ளம்செய்த திவ்விய மென்மொழிப்
பொருளு மித்தலம் புக்கபின் பொய்த்ததோ. |
(இ
- ள்.) இருள் அறும் குணத்து எந்தைக்கு அரவு அணி
வேணியான் நல் வரம் அருளும் காலத்து - குற்றம் இல்லாத குணத்தை
உடைய என் தந்தைக்குப் பாம்பை அணிந்த சடையுடைய சிவபெருமான்
நல்வரம் கொடுத்த காலத்தில், திருவுளம் செய்த திவ்விய மென்மொழிப்
பொருளும் - மனம் கொள்ளும்படி கூறிய தூய்மையான மெல்லிய
|