|
(இ
- ள்.) அன்னை இன்றி அரும் கானில் எய்திய உன்னை -
தாய் துணையன்றி அரிய காட்டிற்குச் சென்ற உன்னை, ஓடி உரகம்
கடித்தலின் - ஓடிவந்து பாம்பு கடித்தபோது, மின்னையும் உனையும் விற்ற
வெவ்வினை என்னை - மின்னல் போன்ற சந்திரமதியையும் உன்னையும்
விற்ற கொடுவினை உடைய என்னை, எவ்வணம் நொந்தனை ஏந்தலே -
எவ்வாறு நினைத்து மனவருத்தம் கொண்டாயோ மைந்தனே!
அரிச்சந்திரன்
புலம்பத் தொடங்கினன். 'மகனே ! நீ தனியே
சென்று காட்டி லரவங் கடித்தபோது உன்னை மறையோனுக்கு விற்ற
என்னை எவ்வாறு நினைத்து மனம் வருந்தி இறந்தனையோ அறியேன்'
என்று கூறினன்.
(50)
| 1027. |
நந்த நாடு
நலமும் இழந்துநீ
எந்த மோடுவந் திவ்வணம் பட்டனை
மைந்த னேஎன்ற னாற்பெற்ற வாழ்வுனக்
கிந்த வாழ்வள வோவென் றிரங்கினான். |
(இ - ள்.) நந்தம் நாடும் நலமும்
இழந்து நீ நம்முடைய
நாட்டையும் நல்ல வாழ்வையும் இழந்துவிட்டு நீ, எந்தம்மோடு வந்து
இவ்வணம் பட்டனை - எம்முடன் வந்து இவ்வாறு வருந்தினாய்,
மைந்தனே என்றனாற் பெற்ற வாழ்வு உனக்கு இந்த வாழ்வளமோ என்று
இரங்கினான் - மைந்தனே! என்னால் நீ பெற்ற வாழ்வு இந்த
அளவுதானோ என்று வருந்தினான்.
'மக்களைப் பெற்றவர்கள் தம் பொருள்களையெல்லாம்
மக்கட்குத்
தந்து இன்பந்துய்த்து வாழும்படி செய்வர். நான் பாவி! உன்னைப் பெற்று
வளர்த்து மறையோனுக்கு அடிமையாக்கினேன்; அதனால் அரவாற்
கடிக்கப்பட்டிறந்தாய்; என்னால் நீ யடைந்த பெருவாழ் விதுவோ?'
என்றுங் கூறிப் புலம்பினன்.
(51)
| 1028. |
ஒன்றி லாத
உயிரினை யோம்பியே
பொன்றி லாது புலையனுக் காட்பட்டான்
வென்றி வேந்தினி மீட்கத் தகுவனோ
என்றி றந்தனை யோவென் றியம்பினான். |
(இ
- ள்.) ஒன்று இலாத உயிரினை ஓம்பியே - நிலைபெறுதல்
இல்லாத உயிரினைப் பாதுகாத்து, பொன்று இலாது புலையனுக்கு
ஆட்பட்டான் - இறவாது புலையனுக்கு அடிமையானான், வென்றி வெந்து
இனி மீட்கத் தகுவனோ - வெற்றிவேந்தனாகிய இவன் நம்மை வந்து
மீட்கும் தன்மையுடையவனோ, என்று இறந்தனையோ என்று இயம்பினான்
- என்று கருதி இறந்தனையோ! என்று கூறினான்.
'ஒன்றுதல்
இலாத' என்பது, 'ஒன்று இலாத' என நின்றது, ஒன்றுதல்
: பொருந்துதல், நிலைத்தல். 'பொன்றுதல் இலாது' என்பது 'பொன்று
இலாது' என நின்றது. ஒன்று, பொன்று என்பன முதனிலைத்
தொழிற்பெயர்கள் எனக் கொள்க. வென்றி - வெற்றி.
'புலையனுக்காட்பட்ட நந்தந்தை இனி வந்து பொருள் கொடுத்து நம்மை
மீட்ட வல்லனல்லன் எனக் கருதி இறந்தனையோ?' என்றும் சொல்லி
யழுதான்.
(52)
|