|
'நான்
அரசுபுரியும் காலம் நீ இறந்தால் எத்தனை முடிமன்னர் நின்
காலில் விழுந்தழுவார்! அத்தனைச் சிறப்பும் அற்று நின் தாய் தனியாகத்
தோளிலேற்றிச் சுடுகாடு கொண்டுவரும் எளிய நிலையில் இறந்தனையே!'
என்று கூறித் தன் எளிய நிலைமை நினைந்து இரங்கினான் எனக் கொள்க.
(57)
| 1034. |
இன்ன வாறுரைத்
தேங்கிட ஏந்திழை
தன்ன கத்தின் உணர்ச்சி தழைத்திட
மன்ன னேயிவன் என்று மதித்தவன்
பொன்ன டித்துணை பூண்டழு தோதுவாள். |
(இ - ள்.) இன்னவாறு உரைத்து ஏங்கிட
- இவ்வாறு கூறி
அரிச்சந்திரன் வருந்தியபோது ஏந்திழை தன் அகத்தின் உணர்ச்சி
தழைத்திட - சந்திரமதியானவள் தன் மனத்தின் உணர்ச்சி வளர,
மன்னனே இவன் என்று மதித்து - அரிச்சந்திரமன்னனே இவன் என்று
நினைத்து, அவன்பொன் அடித் துணை பூண்டு அழுது ஓதுவாள் -
அவனுடைய பொன்போன்ற இரண்டு திருவடிகளையும் பிடித்துக் கொண்டு
அழுது பேசத் தொடங்கினாள்.
அரிச்சந்திரன் பலவாறு புலம்புவது கேட்டவுடன் சந்திரமதி
தன்
கணவன்தான் என அறிந்தாள்; அறிந்தபின் சென்று காலில் விழுந்
தழுதாள்; பின் வருமாறு கூறுகின்றாள் என்பது.
(58)
| |
சந்திரமதி
தன் கணவனை நோக்கிக் கூறுதல் |
| 1035. |
கொதித்தெ
ழுந்து படர்குடி கொண்டுளம்
கதித்த துன்வயிற் கண்டன னுத்தம
விதித்த தல்லது வேறணு காதென
மதித்தி ருநுதல் வல்லிவி ளம்பினாள். |
(இ
- ள்.) மதி திரு நுதல் வல்லி - திங்கள் போன்ற அழகிய
நெற்றியையுடைய கொடிபோன்ற சந்திரமதி, உத்தம - உயர்
குணத்தையுடைய மன்னனே!, கொதித்து எழுந்து படர் குடி கொண்டு -
மனம் வெம்பி உணர்ச்சி மேலெழுந்து துன்பம் குடி கொண்டு, உளம்
கதித்தது உன்வயின் கண்டனன் - மனம் வேதனை மிகுந்ததை
உன்னிடத்தில் கண்டேன், விதித்தது அல்லது வேறு அணுகாது என
விளம்பினாள் - நம் வினைப்படி விதிக்கப்பட்டது அல்லது வேறு ஒன்றும்
நம்மை வந்து அடையாது என்று ஆறுதல் கூறினாள்.
'நமக்கு
வருந்துன்பம் வரவேண்டாமென்று விலக்கினாற்போமோ?
ஆதலால், இனி வருந்துவதிற் பயனொன்றுமில்லை' என்று தேறுதல்
கூறினாள் சந்திரமதி.
(59)
| 1036. |
தீமை செய்த
துனக்கும் சிறுவர்க்கும்
வாய்மை தானது மண்ணுக்கும் விண்ணுக்கும் |
|