|
|
தூய்மை
யேயினி என்று துணிந்தனன்
நீமயங்கல் அறத்தை நினை யென்றாள். |
(இ
- ள்.) உனக்கும் சிறுவற்கும் தீமை செய்தது வாய்மைதான் -
மன்னனாகிய உனக்கும் இச்சிறுவனுக்கும் துன்பம் செய்தது வாய்மை
கடைப்பிடித்தலாகிய இந்த நெறிதான், அது இனி மண்ணுக்கும்
விண்ணுக்கும் தூய்மையே - அது இனிமேல் மண்ணுலகத்துக்கும்
விண்ணுலகத்துக்கும் தூய்மையே தருவதாகும், என்று துணிந்தனன்
- என்று நான் மனந்துணிந்தேன், நீ மயங்கல் அறத்தை நினை என்றாள்
- நீ மயங்கவேண்டாம் அறநெறியையே நினைத்து நீ நட என்றாள்.
'வாய்மை
கூறியதால் வந்த வினையே இது. நம் மைந்தனுக்கும்
நமக்கும் துன்பம் வந்தது உண்மை கூறி, விசுவாமித்திர முனிவர்க்கு நாடு
முழுவதும் கொடுத்ததனாலன்றோ? வாய்மையால் மனத்தூய்மை யுண்டாம்;
மண்ணுலகத்திலும் விண்ணுலகத்தினும் நீங்காப் புகழைத் தரும்; நீ
மயங்கவேண்டாம். அறநெறி வழுவாமல் நடக்க வழி காண்க' என்று
அறிவுரை கூறினள்.
(60)
| |
அரிச்சந்திரன்
கூறுதல் |
| 1037. |
தோகை கேள்புலை
யற்குத் தொழும்பனான்
ஆகை யான்மற் றவன்பணி நீத்தவன்
ஈகை யானிழந் தாற்றவ றெய்திடும்
போகை நன்று பொருள்தரு தற்கென்றான். |
(இ - ள்.) தோகை கேள் புலையற்குத்
தொழும்பன் நான் -
தோகை மயில்போன்ற பெண்ணே கேள்! நான் புலையனுக்கு
அடிமையாய் இருக்கின்றேன், ஆகையால் மற்று அவன் பணி நீத்து -
ஆகையால் அவனுடைய வேலையை விடுத்து, அவன் ஈகை யான்
இழந்தால் - அவனுக்குக் கொடுக்கவேண்டிய துணி பணம் முதலிய
பொருள்களை நான் வாங்காது இழந்துவிட்டால், தவறு எய்திடும் -
பாவம் உண்டாகும், போகை நன்று பொருள் தருவதற்கு என்றான் -
பொருளைக் கொண்டு வருவதற்கு நீ போவதே நன்று என மன்னன்
கூறினான்.
தோகை : உவமையாகுபெயர்; சந்திரமதி. பொருள்
தருதல் -
மறையவனிடத்தில் இருந்து பொருளைக் கொண்டுவருதல். போகை :
போதல் : தொழிற்பெயர். 'நான் உன்னிடம் மட்டும் பொருளை
வாங்காமற் சுடுவது அறத்திற்கு மாறுபாடு ஆம்; ஆதலால் சென்று
பொருள் வாங்கி வா' என்றான்.
(61)
| 1038. |
உன்னை யாளும்
மறையவற் குற்றிது
சொன்ன காலந் தரின்அந்தத் தூசொடு
பொன்னை வாங்கி அளித்துநின் புத்திரன்
தன்னை நீசுடத் தக்க துனக்கென்றான். |
(இ
- ள்.) உன்னை ஆளும் மறையவற்கு உற்று இது சொன்ன
காலம் - உன்னை ஆளுகின்ற மறையவனிடத்தில் சென்று இதனைச்
சொன்னால்
|