|
அப்பொழுது, தரின்
- அவன் கொடுத்தால், தூசொடு பொன்னை வாங்கி
அளித்து - அவன் கொடுக்கும் ஆடையோடு பொன்னையும் நீ
வாங்கிக்கொண்டுவந்து கொடுத்து, நின் புத்திரன் தன்னை நீ சுடத்தக்கது
உனக்கு என்றான் - உன் மகனை நீ சுடுவதற்கு உரிமை உண்டு என்றான்.
மறையவன்பால்
உற்று என்பது, மறையவற்கு உற்று என ஏழாம்
வேற்றுமை நான்கனுருபுகொண்டு வந்தது; வேற்றுமைமயக்கம். தூசு + ஒடு;
தூசு - ஆடை. பொன் - இங்குச் சுடலையிற் கொடுக்கும் கால் பணம்.
'மறையவற்குச் சொன்ன' எனக் கூட்டின் வேற்றுமை மயக்கம் இல்லை.
(62)
| |
சந்திரமதி
செல்லுதல் |
| 1039. |
அரக்கெ னச்சிவப்
புற்றவ ழற்கணன்
இரக்க மற்பமும் இல்லவன் இப்பொருள்
தரக்க ருத்திலன் தந்திடிற் காண்பனென்(று)
உரைத்து வல்லி மகனைவைத் தோடினாள். |
(இ - ள்.) அரக்கு எனச் சிவப்புற்ற
அழல் கண்ணன் -
அரக்குப் போல் சிவந்த நெருப்பைச் சிந்தும் கண்களையுடையவன்
மறையவன், இரக்கம் அற்பமும் இல்லவன் - இரக்கம் சிறிதும்
இல்லாதவன், இப் பொருள் தர கருத்து இலன் - இப்பொருளைக்
கொடுக்க மனம் இல்லாதவன், தந்திடிற் காண்பன் என்று உரைத்து -
அவன் கொடுத்தால் நான் வந்து காணுகின்றேன் என்று கூறி, வல்லி
மகனை வைத்து ஓடினாள் - வல்லிக்கொடிபோன்ற அப்பெண் மகன்
உடலை அங்கேயே வைத்துவிட்டு ஓடினாள்.
சினம் மிகுதியுடைய மறையவன் ஆதலால் 'அரக்கெனச்
சிவந்த
கண்' என்றும், 'அழல் கண்' என்றும் கூறினாள். 'தந்திடிற் காண் பென்'
என்பது 'தருகின்றானா என்று பார்க்கின்றேன்' என்னும் உலக
வழக்குப்போல் நின்றது.
(63)
| 1040. |
மங்கைகடி
தோடிடலும் மைந்தன்முகம் நோக்கி
அங்கைதொட நாணிமனம் அஞ்சி அயல்நின்றே
கங்கைவள நாடன்இரு கண்கலுழி சிந்த
வெங்கயம் நுகர்ந்தவிள வின்கனியை ஒத்தான். |
(இ
- ள்.) மங்கை கடிது ஓடிடலும் - சந்திரமதி விரைந்து
ஓடினவுடன், கங்கை வள நாடன் - கங்கை ஆறு பாயும்
வளநாட்டையுடைய மன்னன், மைந்தன் முகம் நோக்கி - தன் மகனுடைய
முகத்தைப் பார்த்து, அங் கை தொட நாணி - தன் அழகிய கைகளால்
தொடுவதற்கு வெட்கப்பட்டு, மனம் அஞ்சி அயல் நின்றே - மனத்தில்
அச்சங்கொண்டு பக்கத்தில் நின்றே, இரு கண் கலுழி சிந்த - இரண்டு
கண்களினின்றும் கண்ணீர் பெருகிவர, வெம் கயம் நுகர்ந்த விளவின்
கனியை ஒத்தான் - கொடிய யானை உண்ட விளங்கனியைப்போல மனம்
வெறிதானான்.
|