|
| |
காசி
யரசன் மைந்தன் இறந்துகிடக்கக் கண்டு
திகைத்து
நிற்றல்
|
| 1043. |
அம்மதலை
யைத்தெரு வகத்தினிடை காணா
இம்மதலை யார்மதலை என்னவல மந்தாள்
எம்மதலை யைக்கணம் எறிந்ததுகொல் என்னாத்
தம்மதலை மெய்க்குறி தனைத்தெரித லுற்றாள். |
(இ
- ள்.) அம் மதலையைத் தெரு அகத்தின் இடை காணா -
அக் குழந்தையைத் தெருவிலே கண்டு, இம் மதலை யார் மதலை என்ன
அலமந்தாள் - இந்தப் பிள்ளை யார் குழந்தை என மனம் வருந்தினாள்,
எம் மதலையைக் கணம் எறிந்ததுகொல் என்னா - எம்முடைய
பிள்ளையைப் பேய்க்கூட்டம் கொண்டுவந்து எறிந்ததோ என்று, தம்
மதலை மெய்க்குறிதனைத் தெரிதல் உற்றாள் - தம் பிள்ளையின் உடம்பு
அடையாளம் இருக்கிறதோ என ஆராயத்தொடங்கினாள்.
காணா
: (கண்டு) செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
அமைந்தாள் - "அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி" என்ப.
ஆகலின் மயங்கினாள் என்பது பொருள். கணம் - பூதகணம், பேய்க்
கணம் என்னும் இரண்டும் ஆம். தன் மைந்தனைப்போல உருவமும்
பருவமும் ஒத்திருந்ததால் அடையாளம் பார்க்கத் தொடங்கினாள் என்று
கொள்க.
(67)
| |
காவலர்
வந்து சந்திரமதியைப் பிடித்தல் |
| 1044. |
விடிந்திடு
முனந்நகரி காவலர் விரைந்தே
இடிந்தமதி லேறியு மிழிந்துமறு குற்று
மடிந்தகுழ விக்கருகு கண்டுமட மாதைக்
கடிந்தனர் கொணர்ந்துயிர் கவர்ந்ததிவள் என்றே. |
(இ - ள்.) அ நகரி காவலர் விடிந்திடும்
முன் விரைந்தே - அந்
நகரத்தைக் காவல் காப்பவர் பொழுது விடிவதற்குமுன் விரைந்து, இடிந்த
மதில் ஏறியும் இழிந்தும் மறுகு உற்று - இடிந்து கிடக்கும் மதில் வழியில்
ஏறியும் இறங்கியும் தெருவை அடைந்து, மடிந்த குழவிக்கு அருகு
மடமாதைக் கண்டு - இறந்துகிடக்கும் குழந்தைக்கு அருகில்
சந்திரமதியைக் கண்டு, உயிர் கவர்ந்தது இவள் என்றே - இவளே
குழந்தையைக் கொன்று உயிரைக் கவர்ந்தாள் என்று, கொணர்ந்து
கடிந்தனர் - கொண்டுவந்து கடுமையாகக் கடிந்து பேசத் தொடங்கினர்.
மன்னன் மகனாதலால் காவலர் உடனே தேடிவந்தனர்;
இடிந்த
சுவர்களில் ஏறியும் இறங்கியும் ஆராய்ந்து தேடிவரும்போது தெருவிற்
பிணத்தையெடுத்துப் பார்க்கும் சந்திரமதியைக் கண்டனர். 'இவள்
கொன்றவள்' என்று சினந்து பேசினர்; அடிக்கத்தொடங்கினர்.
(68)
| 1045. |
பதைத்திடு
சினத்தொடு பசுங்குழவி தன்னை
வதைத்ததிவ ளாமென மலர்க்குழல்பி டித்தே |
|