|
|
விதைத்தலின்
விழுந்தென விழிக்கனல் தெறிக்க
உதைத்தனர் அடித்தனர் ஒடித்தனர்கள் என்பை. |
(இ
- ள்.) பதைத்திடு சினத்தொடு - துடிக்கின்ற கோபத்தோடு,
பசுங்குழவி தன்னை வதைத்தது இவள் ஆம் என மலர்க்குழல் பிடித்து -
பசுமையான குழந்தையைக் கொன்றது இவள்தான் என்று அவளுடைய
மலரணிந்த கூந்தலைப் பிடித்து, விதைத்தலின் விழுந்தென விழிக் கனல்
தெறிக்க - விதைக்கும்போது விழுகின்ற விதைபோலக் கண்களிலிருந்து
நெருப்புப்பொறி தெறிக்க, உதைத்தனர் அடித்தனர் என்பை ஒடித்தனர்கள்
- உதைத்தார்கள் அடித்தார்கள் எலும்பு ஒடியும் படி முறித்தார்கள்.
விதைக்கும்போது
விழுகின்ற விதை கண்களிலிருந்து விழும்
தீப்பொறிகளுக்கு உவமை. முன் பின் பாராது. ஆராயாது, கேளாது
அடிக்கவும் உதைக்கவும் கூந்தலைப் பிடித்திழுக்கவும் சினந்து பேசவும்
துணிந்தார்கள். கையிற் பிணம் இருக்கக் கண்டதனால் இவ்வாறு
வருத்தினர்.
(69)
| |
காவலரிற்
சிலர் உண்மை வினாவுதல் |
| 1046. |
சென்றவர்கள்
சென்றவர்கள் சேரவட ரக்கண்(டு)
அன்றவர்க ளிற்சிலர் விலக்கியக லப்போம்
என்றுதலம் ஏதுகுலம் ஏதுசிறு சேயைக்
கொன்றபரி சேதுஅரிவை கூறென வுரைத்தார். |
(இ - ள்.) சென்றவர்கள் சென்றவர்கள்
சேர அடரக் கண்டு -
அங்கு வந்தவர்கள் வந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து துன்புறுத்துதலைக்
கண்டு, அன்று அவர்களிற் சிலர் விலக்கி அகலப்போம் என்று -
அப்போது அங்கு வந்தவர்களிற் சிலர் அவர்களை விலக்கி விலகிப்
போகும்படி கூறிவிட்டு, தலம் ஏது குலம் ஏது சிறு சேயைக் கொன்ற
பரிசு ஏது - உன் ஊர் எது? உன் குலம் யாது? இக் குழந்தையைக்
கொன்ற விதம் யாது?, அரிவை கூறு என உரைத்தார் - பெண்ணே! கூறு
என்று கேட்டார்கள்.
(70)
| |
சந்திரமதி
எண்ணித் துணிதல் |
| 1047. |
தேவருள் நமக்கிலை
செகுத்திலன் எனிற்றான்
ஆவதிலை நம்மொழியை யார்உறுதி கொள்வார்
நோவதிலும் நம்மகவின் நோதகவி னாலும்
சாவதினி தென்பது மனத்திடை தரித்தாள். |
(இ
- ள்.) தேவு அருள் நமக்கு இலை - தெய்வத்தின் திருவருள்
நமக்குத் துணையாக இல்லை, செகுத்திலன் எனில்தான் - நான் கொல்ல
வில்லை என்றால், ஆவது இலை - ஆகப்போவது ஒன்றும் இல்லை,
நம் மொழியை யார் உறுதிகொள்வார் - நம்முடைய வார்த்தையை யார்
உறுதியாக உண்மை என்று ஏற்றுக்கொள்வார்கள்; நோவதிலும் நம்
மகவின்
|