பக்கம் எண் :


51

     பாதத்திற்கு - 'மணற்கீன்ற முளை' என்பதுபோல உருபுமயக்கம்.
தப : உரிச்சொல். என : என்ன என்ற உவமவுருபின் தொகுத்தல். ஈது
நீட்டல் விகாரம். எனா : செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
சிலம்பு இயல்பாக ஒலித்தலை அபயங்கேட்டு ஒலிப்பதாகக் கூறுதலின்
தற்குறிப்பேற்ற அணி. ஒழித்துக்காட்டணி உடன்கலந்ததால் கலவை
அணியாம். "உபய தனமகையி லொடியு மிடைநடையை யொழியு
மொழியுமென வொண்சிலம், பபய மபயமென வலற நடை பயிலு மரிவை
மகளிர் கடைதிறமினோ" என்ற கலிங்கத்துப் பரணிக் கடைதிறப்புச்
செய்யுட்கருத்து இது.
                                                    (18)

 
  அயோத்தியில் சிறையும் குறையும் இல்லை    
92. நிறையும் தாமரை நீட்டத்தி னற்புனல்
சிறையும் அன்றிச் சிறைபிறி தில்லையால்
பிறையும் மென்முலைப் பேதையர் சிற்றிடைக்
குறையும் அன்றிக் குறைபிறி தில்லையே.

     (இ - ள்.) நிறையும் தாமரை நீட்டத்தின் நல்புனல் சிறையும்
அன்றிச் சிறை பிறிது இல்லை - நிறைந்துள்ள தாமரைமலர்களின் தண்டு
நீட்சியின் அளவு நல்ல நீர் சிறை செய்யப்பட்டுளதேயன்றி வேறு சிறை
யொன்றும் இல்லை. பிறையும் மென்முலைப் பேதையர் சிற்றினடக்
குறையும் அன்றிக் குறை பிறிது இல்லை - பிறைச்சந்திரனும் மெல்லிய
முலையையுடைய பெண்களின் சிறிய இடைகளின் குறையுமன்றி வேறு
குறைவு ஒன்றும் அந் நகரில் இல்லை.

     அயோத்தியில் மக்கள் குற்றஞ்சாட்டப்பட்டுச் சிறைப்படுதலில்லை
என்பதாம். இச் செய்யுளும் ஒழித்துக்காட்டணி. ஆல் : அசை. பிறிது :
ஒன்றன்பால் பெயர். ஏகாரம் : ஈற்றசை. பிறையின் குறைவும், சிற்றிடையின்
குறைவும் அன்றி வேறு குறைவு ஒன்றும் இலலை என்பது. பொருட்குறை
கல்விக்குறை உணவுக்குறை உடைக் குறை போன்ற வேறு குறைகள்
இல்லை என்க.
                                                     (19)

 
  அயோத்தியில் பகை என்பது இல்லை   
93. பொருந்தி மானும் புலியும் புனலுடன்
அருந்தி வாழும் ஒருதுறை அன்பினால்
பருந்தும் பைங்கிளி யும்ஒரு பஞ்சரத்
திருந்து வாழும் இரவும் பகலுமே.

     (இ - ள்.) மானும் புலியும் அன்பினால் பொருந்தி ஒரு துறை
புனல் உடன் அருந்தி வாழும் - மரனும் புலியும் அன்போடு கூடி ஒரே
நீர்த்துறையில் உடனிருந்து நீர் குடித்து வாழும், பருந்தும் கிளியும்
அன்பினால் இரவும் பகலும் ஒரு பஞ்சரத்து இருந்து வாழும - பருந்தும்
கிளியும் அன்போடு இரவும் பகலும் ஒரே கூட்டில் ஒன்றியிருந்து கூடி
வாழும்.