|
(இ
- ள்.) அத் தலம் அணைந்தவருள் அக் கொடியர் - அந்த
நகரத்தை அடைந்தவருள் அந்தக் கொடிய வீரர்கள், மன்னைக் கைத்
தலம் எடுத்து இரு கழல் தொழுது நின்றார் - மன்னனைத் தம் கைகளை
உயர்த்தி அவன் கால்களை வணங்கி நின்றார்கள், மெய் தவம் முயன்ற
மணி வேயனைய தோள் மேல் - உண்மைத்தவத்தை முயன்ற அழகிய
மூங்கில் போன்ற தோளின்மேல், வைத்த பிணமும் கொடு மடக் கொடியும்
நின்றாள் - வைத்த பிணத்துடன் சந்திரமதியும் நின்றாள்.
காவலர்களிற்
கொடியவர்தாம் முதலிற் கூறத் தொடங்குவார்;
நல்லவர் முன் சொல்லத் துணியார் ஆதலால் 'அணைந்தவருள் அக்
கொடியர்' என்றார். மன்னன் முன்னின்று வணங்கிநின்றார் செய்தி
கூறுவதற்கு என்பது குறிப்பு.
(78)
| |
அரசனுக்குக்
காவலர் கூறுதல் |
| 1055. |
நின்றளவில்
மன்னனும் நிகழ்ந்தபிழை என்கொல்
என்றதி சயித்திஃ திறக்கென உரைக்க
மன்றல்கமழ் கோதைபிணம் வைத்தனள் நிலத்தில்
கொன்றபரி செந்தநெறி கூறிடுமின் என்றான். |
(இ - ள்.) நின்ற அளவில் - அவர்கள்
அவ்வாறு
நின்றபொழுது, மன்னனும் நிகழ்ந்த பிழை என்கொல் என்று அதிசயித்து
- மன்னன் நடந்த குற்றம் என்ன என்று வியந்து, இஃது இறக்கென
உரைக்க - இதனை இறக்கி வை என்று சொன்னவுடன் மன்றங் கமழ்
கோதை பிணம் வைத்தனள் நிலத்தில் - மணம் வீசும் மாலை அணிந்த
சந்திரமதி நிலத்திற் பிணத்தை இறக்கிவைத்தாள், கொன்ற பரிசு எந்த
நெறி கூறிடுமின் என்றான் - இப்பிள்ளையை எவ்வாறு கொன்றாள்
கூறுங்கள் என மன்னன் வினவினான்.
கோதை - மாலை; உவமை ஆகுபெயர் எனவும் கொள்ளலாம்.
மன்னன் அறநெறி தவறாதவன் ஆதலால் முதலில் வியந்தான்; 'இப்
பெண்ணைக் கொலைசெய்தவள் என்று கூட்டிவந்தனரே! இது பொய்'
என்று குறித்து. உடனே சுமையை இறக்கும்படியும் கூறினான். பின் 'இவள்
கொன்றவள் என்பது எவ்வாறு கண்டீர்கள்?' என்றும் வினவினான்.
(79)
| 1056. |
என்றிறை
யுரைத்திட இறைஞ்சியவர் மன்னா
இன்றிரவு நின்மகவை வந்திவள் எடுத்து
மன்றணி நெடுந்தெருவில் வைத்துடல் பிளந்து
கொன்றபடி கண்டுகொடு வந்தனமுன் என்றார். |
(இ
- ள்.) என்று இறை உரைத்திட - என்று மன்னன் கூறியவுடன்,
அவர் இறைஞ்சி - ஊர்க்காவலர் வணங்கி, மன்னா இன்று இரவு நின்
மகவை வந்து இவள் எடுத்து மன்று அணிநெடுந்தெருவில் வைத்து -
மன்னனே! இன்று இரவில் வந்து உன் பிள்ளையை எடுத்து அழகிய
பெரிய தெருவில் வைத்து, உடல் பிளந்து கொன்றபடி கண்டு - உடலைப்
பிளந்து
|