|
கொன்ற விதத்தைக்
கண்டு, முன் கொடு வந்தனம் என்றார் - உன்
முன்னால் கொண்டுவந்தோம் என்றார்கள்.
'நேரிற்
கண்டு கையும் களவுமாகப் பிடித்துக்கொண்ட வந்தோம்;
உண்மை இது' என்றார் காவலர்கள்.
(80)
| |
மன்னன்
சந்திரமதியை வினாதல்
|
| 1057. |
அந்தமொழி
சொன்னவரை அங்கையின்அ மைத்து
வந்தபடி யாவும்இவண் வல்லியுரை என்னச்
சந்திர மதித்தெரிவை தன்னடியை நோக்கிச்
செந்துவர் மலர்க்குமுத வாய்மலர்தி றந்தாள். |
(இ - ள்.) அந்த மொழி சொன்னவரை
- அவ்வாறு பழி
மொழி சொன்னவர்களை, அம் கையின் அமைத்து - மன்னன் தன்
அழகிய கையால் நிறுத்தும்படி குறிகாட்டி, வந்தபடி யாவும் இவண்
வல்லி உரை என்ன - நடந்தவிதம் முழுவதையும் இங்கு பெண்ணே! நீ
சொல் என்று கூறியபோது, சந்திரமதித் தெரிவை தன் அடியை நோக்கி
- சந்திரமதி என்னும் அப்பெண் தன் பாதங்களைப் பார்த்துக் கொண்டு,
செந் துவர் மலர் குமுத வாய் மலர் திறந்தாள் - சிவந்த பவழம்
போன்றும் அல்லிமலர் போன்றும் விளங்கும் தன் வாயைத் திறந்து
பேசத் தொடங்கினாள்.
அம் + கை - அங்கை; வல்லி : விளிவேற்றுமை.
வாய் மலர் :
உருவகம். காவலர்களைக் கையமைத்து நிறுத்தி, மன்னன் மங்கையை
நோக்கி 'நீ உண்மையை உரை' என்று கூற, சந்திரமதி கூறுகின்றாள்.
(81)
| |
மன்னன்
வினாவிற்குச் சந்திரமதி மறுமொழி கூறல் |
| 1058. |
செய்யமக
வின்னுயிர் செகுத்தபடி கண்டாய்
கையினில் எடுத்ததொர் சவத்தையெதிர் கண்டாய்
மெய்யிடை புலால்வெறி விரிந்தமுடை கண்டாய்
ஐயமில்லை யானுமொர் அரக்கியறி யென்றாள். |
(இ
- ள்.) செய்ய மகவு இன்னுயிர் செகுத்தபடி கண்டாய் - நல்ல
குழந்தை இனிய உயிர் நீக்கிக் கொல்லப்பட்டிருப்பதைப் பார்த்தாய்,
கையினில் எடுத்தது ஓர் சவத்தை எதிர் கண்டாய் - நான் கையில்
எடுத்துவைத்திருந்த பிணத்தையும் பார்த்தாய், மெய்யிடை புலால் வெறி
விரிந்த முடை கண்டாய் - என் உடம்பில் புலால் நாற்றம் மிகுந்த
முடைநாற்றத்தையும் பார்த்தாய், ஐயம் இலை யானும் ஓர் அரக்கி அறி
என்றாள் - ஐயமே இல்லை யானும் ஓர் அரக்கியேயாவேன் இதனை நீ
அறிவாய் என்றான்.
தான்
அரக்கியே என்பதை வலியுறுத்தத் தன்னிடம் கொலை
பிணத்தை விரும்புதல், மடைநாற்றம் என்பன இருத்தலைச் சான்று
காட்டினள். 'ஐயமின்றி யான் அரக்கி என்பதனை யறிந்துகொள்' என்று
துணிந்து பொய் கூறினள் சந்திரமதி.
(82)
|