|
(இ
- ள்.) உயிர்க் கொலை புரிந்தவர் முகக் குறி உரைக்கும் -
உயிர்க்கொலை செய்தவருடைய முகக் குறிப்பே அவ்வுண்மையைச்
சொல்லும், கையிற் குறி உரைக்கும் - கையில் உள்ள அடையாளங்கள்
தெரிவிக்கும், இரு கண் குறி உரைக்கும் - இரண்டு கண்களின்
அடையாளம் தெரிவிக்கும், குயில் குரல் மடந்தை இவள் கொன்ற குறி
உண்டு என்று - குயில் போன்ற குரலினையுடைய இவள் கொன்ற
அடையாளம் இருப்பதாக, எனக்கு அயிர்ப்பு இலை என அமைச்சரொடு
உரைத்தான் - எனக்கு ஐயம் உண்டாகவில்லை என அமைச்சர்களிடம்
மன்னன் கூறினான்.
"அடுத்தது
காட்டும் பளிங்குபோல்" என்ற திருக்குறள் ஒப்பு
நோக்கத்தக்கது. முகமும் கண்ணும் கையும் கொலை புரிந்தவர் இவர்
என்பதைக் குறிப்பாய்க் காட்டும் உறுப்புகளாம். 'இவள் உறுப்புக்களிற்
குறிப்புத் தோன்றவில்லை' என்று மன்னன் மந்திரிகட்குக் கூறினன்
என்பது.
(85)
| |
காவலர்
துணிவு கூறுதல் |
| 1062. |
வள்ளல்இவை
கூறிடலும் வந்தவர்கள் மன்னா
பிள்ளையை எடுத்தவடி யின்பிறகு சென்று
கள்ளியிவள் கொன்றபடி கண்டுகொடு வந்தேம்
உள்ளதல தில்லதை உரைக்கவிதி யுண்டோ. |
(இ - ள்.) வள்ளல் இவை கூறிடலும்
- மன்னன் இவற்றைக்
கூறியவுடன். வந்தவர்கள் - அங்கு வந்த காவற்காரர், மன்னா பிள்ளையை
எடுத்த அடியின் பிறகு சென்று - மன்னனே! பிள்ளையை
எடுத்துக்கொண்டுசென்ற அடியைத் தொடர்ந்துபோய், கள்ளி இவள்
கொன்றபடி கண்டு - கள்ளியாகிய இவள் கொன்றவிதத்தைக் கண்டு,
கொடு வந்தேம் - பிடித்துக்கொண்டு வந்தோம், உள்ளது அலது இல்லதை
உரைக்க விதி உண்டோ - நடந்த உண்மையை அன்றி இல்லாததை
நாங்கள் கூற முறை உண்டோ?
அரசன் அமைச்சர்களை நோக்கிக் கூறியபோது காவலர்கள்
மன்னனை நோக்கி 'மன்னா! ஐயப்படவேண்டாம்; நாங்கள் அடிச்
சுவட்டைப் பற்றிப் பின் சென்று கொன்று தின்னக் கண்டு, கையிற்
பிள்ளையுடன் கொண்டுவந்திருக்கிறோம்; உண்மை இது' என்றுரைத்தனர்.
(86)
| 1063. |
உன்னுரை தனக்கொரெதிர்
உத்தரமும் உண்டோ
என்னுரை செயத்தகுவ தெம்பெரும வென்றே
மன்னுரை கடற்புவி வளாகமிசை வாழும்
இன்னுயிர் இறக்குமிவள் தன்னைவிடில் என்றார். |
(இ
- ள்.) எம் பெரும - எம் பெருமானே!, உன் உரை தனக்கு
ஓர் எதிர் உத்தரமும் உண்டோ - உன்னுடைய மொழிக்கு ஓர் எதிர்
மொழியும் உண்டோ, உரை செயத் தகுவது என் - யாங்கள் சொல்லக்
கூடியது யாது, என்று - என்று கூறியபின், இவள் தன்னை விடில் -
இவளைக் கொல்லாது
|