|
|
தொல்லைவினை
எவ்வகை தொடர்ந்தது அறிதக்க(து)
இல்லையென மைந்தனில் இவட்குருகி நின்றான். |
(இ
- ள்.) கொல்ல இவள் வல்லவளும் அல்லள் - இவள் கொலை
செய்யும் வலிமையுடையவளும் அல்லள், கொலை செய்தாள் அல்லள்
எனில் - இவள் கொலை செய்தவள் அல்லள் என்று கூறுவோமாயின்,
அங்கு ஒருவர் வந்த அடி இல்லை - அங்கு வேறு ஒருவரும் வந்த
காலடியும் இல்லை, தொல்லை வினை எவ்வகை தொடர்ந்தது - பழைய
வினை எவ்வாறு இவளை வந்து பற்றியது, அறிதக்கது இல்லை என
மைந்தனில் இவட்கு உருகி நின்றான் - அறியக்கூடிய வழி ஒன்றும்
இல்லையே எனத் தன் மைந்தனிறந்ததற்கு மனமுருகுவதினும்
இவளிறப்பது குறித்து மிகவும் மனம் உருகினான் மன்னன்.
'தொல்லைவினை
எவ்வகை தொடர்ந்தது' என்பதற்கு
பழவினையானது நம்மை வந்து பற்றியது எவ்வாறு என்று மன்னன்
வருந்தினான் எனப் பொருள் கொள்ளலுமாம். கொலை
செய்யாதவளாயிருப்பிற் கொலைத்தண்டனை விதிப்பதும் பாவம்; கொலை
புரிந்தவளாயிருப்பின் விடுதலும் பாவம் என்பது கருத்து.
(94)
| 1071. |
முன்னைவிதி
யாலும்வினை முற்றுமத னாலும்
என்னைஇவள் தன்னைவிடல் என்பதுநி னைந்தே
கன்னல்செறி காசிபதி கன்னபுரி மன்னன்
மின்னைவதை செய்வது விரும்பியொரு மித்தான். |
(இ - ள்.) முன்னை விதியாலும்
- பழைய வினையினாலும்,
வினைமுற்றும் அதனாலும் - விசுவாமித்திரன் செய்த சூழ்ச்சி முடிவாக
வேண்டிய காரணத்தாலும், இவள் தன்னை விடல் என்னை என்பது
நினைந்தே - இவளை விடுதலை செய்வதற்கு வழிமுறை என்ன என்று
நினைத்து, கன்னல் செறி காசி பகுதி - கரும்பு நெருங்கி விளையும் காசி
நகரத்து மன்னன், கன்னபுரி மன்னன் மின்னை - கன்னோசி நாட்டு
மன்னனுடைய மகளாகிய சந்திரமதியை, வதை செய்வது விரும்பி
ஒருமித்தான் - கொலை செய்வதற்கு விரும்பித் துணிந்தான்.
காசி மன்னன் சந்திரமதியைக் கொலை செய்வதற்குத்
துணிந்தான்;
பழவினையாலும், கோசிகன் சூழ்ச்சி முடிவுபெறவேண்டிய காலம்
வந்ததாலும் அவனுக்கு அத் துணிவு வந்ததென்பது கருத்து.
(95)
| 1072. |
அவ்வண நினைந்திடலும்
அவ்வளவு தன்னில்
செவ்வண வயிற்குரிசில் தீவினைகள் எல்லாம்
இவ்வணம் அகன்றிடும் எனுங்குறிவி ளங்க
மைவண வயங்கிருள் மறைந்ததுவி டிந்தே. |
(இ
- ள்.) அவ்வணம் நினைந்திடலும் அவ்வளவு தன்னில் - அவ்
விதம் நினைத்தவுடன் அவ்வளவு நேரத்தில், செவ்வண்ண அயில் குரிசில்
தீவினைகள் எல்லாம் - சிவந்த நிறத்தையுடைய வேலைப் பிடித்த
அரிச்சந்திர மன்னனுடைய தீவினைகள் எல்லாம், இவ்வணம் அகன்றிடும்
|