|
எனும் குறி விளங்க
- இவ்விதம் நீங்கிவிடும் என்ற அடையாளம்
விளங்கும்படி, மை வண வயங்கு இருள் மறைந்தது விடிந்து - கரிய மை
போன்று விளங்கும் இருள் நீங்கிற்று; பொழுது விடிந்தது.
இருள்
நீங்கிப் பொழுது விடிந்தது. அரிச்சந்திர மன்னனைச் சூழ்ந்த
தீவினைகள் எல்லாம் நீங்கி இனிமேல் இன்பம் விளையும் என்பதைக்
காட்டுவதுபோல இருந்தது. இது தற்குறிப்பேற்ற வணி.
(96)
| |
ஞாயிற்றின்
தோற்ற வருணனை |
| 1073. |
தங்குல மடந்தைபடு
சஞ்சலம் உணர்ந்தே
மங்குலெழு வெண்சசி மழுங்கியொளி மாயக்
கங்குல்மகள் இந்தவினை கண்டகல ஓட
வெங்குல நெடுங்கதிர் வெகுண்டென எழுந்தான். |
(இ - ள்.) தம் குல மடந்தை படு
சஞ்சலம் உணர்ந்தே - தன்
குலப்பெண்ணாகிய சந்திரமதி படுகின்ற கவலைகளை உணர்ந்து, மங்குல்
எழு வெண் சசி மழுங்கி ஒளி மாய - மேகத்தில் தோன்றுகின்ற
வெண்மையான நிலா மழுங்கி ஒளி குறையவும், கங்குல் மகள் இந்த
வினை கண்டு அகல ஓட - இரவு என்னும் பெண் இந்தச் செயல்களைக்
கண்டு அகன்று ஓடவும், வெங்குல நெடுங்கதிர் வெகுண்டனன் எழுந்தான்
- வெம்மை வாய்ந்த அரிச்சந்திரன் குலத்துக்கு முதல்வனாகிய கதிரவன்
சினங்கொண்டு வந்தவன் போல மேலே எழுந்து தோன்றினான்.
தன் குலத்திற்றோன்றிய சந்திரமதிக்குக் கொலைத்தண்டனை
வருவது
குறித்துச் சந்திரன் ஒளி மங்கியது எனவும், நாம் இக் காட்சியைப் பார்ப்பது
கொடிது என்று குறித்து இரவு நீங்கியது எனவும், தன் குலமைந்தனுக்குத்
தீவினை நீங்குவதைப் பார்ப்பது குறித்துச் சூரியன் எழுந்தது எனவும்
கற்பனை செய்தார் ஆதலால் இதுவும் தற்குறிப்பேற்ற வணியாம்.
(97)
| 1074. |
காதலி பிடித்தநெறி
கண்டெமது கற்பின்
போதமிது வென்றுபுரு டர்க்கெதிர் குலாவும்
மாதர்முக மென்னவய லுந்தடமும் மற்றும்
ஆதபன் முகத்தெதிர் அலர்ந்தஅர விந்தம். |
(இ
- ள்.) காதலி பிடித்த நெறி கண்டு - காதலியாகிய சந்திரமதி
பிடித்த வழியைக் கண்டு, எமது கற்பின் போதம் இது என்று - தாமரை
மலர்களாகிய எங்களுடைய கற்பின் அறிவுத் திறம் இது என்று கூறி,
புருடர்க்கு எதிர் குலாவும் மாதர் முகம் என்ன - கணவருக்கு எதிரில்
மகிழ்ந்து விளையாடுகின்ற பெண்களின் முகத்தைப் போல, வயலும்
தடமும் மற்றும் - வயல்களிலும் குளங்களிலும் மற்ற இடங்களிலும்,
ஆதபன் முகத்து எதிர் அரவிந்தம் அலர்ந்த - சூரியனுடைய முகத்து
எதிரிலே தாமரை மலர்கள் மலர்ந்தன.
|