|
கணவனைக்
கண்டு மகிழும் கற்புடை மகளிர் முகம்போலக் கதிர
வனைக் கண்டு தாமரை மலர்கள் மலர்ந்தன என்பது கருத்து.
(98)
| 1075. |
விடிந்த
காலையில் வேறொரு திறம்புறம் காணான்
மடிந்த மைந்தனை எடும்என மனையிடைப் போக்கி
முடிந்த தீவினைப் பயத்தினும் முதிர்வினை யானும்
கடிந்தி டும்படி கருதினன் காசியர் கோமான். |
(இ - ள்.) விடிந்த காலையில்
வேறொரு திறம் புறம் காணான்
- பொழுது விடிந்த நேரத்தில் வேறு ஒருவகையும் வெளியில்
காணாதவனாய், மடிந்த மைந்தனை எடும் என மனையிடைப் போக்கி -
இறந்த மகனை இங்கிருந்து எடும் என்று அரண்மனைக்குள்
அனுப்பிவிட்டு, முடிந்த தீவினைப் பயத்தினும் - வந்து சேர்ந்த தீவினைப்
பயனாலும் முனிவன் செய்கின்ற கொடுஞ்செயல்களாலும், காசியர் கோமான்
கடிந்திடும்படி கருதினன் - காசிநகரத்து மன்னன் சந்திரமதியைக்
கொல்வது என்றே முடிவு செய்தான்.
சந்திரமதியைக் கொலைத்தண்டனையின்றி விடுவதற்கு
வழி
யாய்ந்தும் காணாதவனாயினன் மன்னன் என்பார், 'வேறொரு திறம் புறம்
காணான்' என்றார். விடியும் வரை ஆய்ந்தான்; அவனுக்கு வேறு வகை
தோன்றவில்லை எனக் கொள்க. விடிந்த காலையில் கடிந்திடும்படி
கருதினன் என்று கூட்டுக.
(99)
| |
வீரவாகுவை
யழைத்தல் |
| 1076. |
சோரர்
மற்றயல் உண்டெனில் சோதித்து வந்திந்
நேரம் யாவரும் உரைத்திலர் அவரவர் நினைவை
யார் அறிந்தவர் இவள்தனை வதைப்பதற் கழைத்து
வீர வாகுவைக் கொணர்கெனத் தூதரை விடுத்தான். |
(இ
- ள்.) சோரர் மற்று அயல் உண்டு எனில் - கள்வர் வேறு
அயலிடத்து இருக்கின்றார் எனில், சோதித்து வந்து இந் நேரம் யாவரும்
உரைத்திலர் - தேடிவந்து இவ்வளவு நேரமும் யாரும் கூறவில்லை,
அவரவர் நினைவை யார் அறிந்தவர் - அவரவருடைய எண்ணத்தை யார்
அறிவார்கள். இவள்தனை வதைப்பதற்கு வீரவாகுவை அழைத்துக்
கொணர்க எனத் தூதரை விடுத்தான் - இவளைக் கொல்வதற்கு
வீரவாகுவை அழைத்து வாருங்கள் என்று தூதர்களை மன்னன்
அனுப்பினான்.
'நம்
மைந்தனைக் கொன்றவர் கள்ளர்க ளெனில் அவர்களைக்
கண்டறிந்து வந்து கூறுவாரொருவருமிலர். காவலர்கள் எண்ணம்
எப்படியோ? யார் அறிய இயலும்?' என்று சிந்தித்துப் பின்னர்க் கொலை
செய்வதற்குரிய வீரவாகுவை யழைத்துவர ஆணை தந்தாள் என்பது.
(100)
|