|
| |
காசி
அரசன் வீரவாகுவுக்கு ஆணையிடுதல் |
| 1079. |
துட்டி யாமிவள்
குழவியைத் துணித்தனள் என்னாத்
திட்டி யாற்கண்டேம் எனச்சிலர் அரிவையைப் பிடித்துக்
கட்டி வந்தனர் கட்டொடுங் கொண்டுபோய்க் களத்தில்
வெட்டு வித்திடென் றீந்தனன் காசியர் வேந்தான்.
|
(இ
- ள்.) துட்டியாம் இவள் குழவியைத் துணித்தனன் என்னா -
கெட்ட குணம் உடைய இவள் குழந்தையைக் கொன்றாள் என்று,
திட்டியால் கண்டேம் எனச் சிலர் அரிவையைப் பிடித்து - கண்ணால்
கண்டேம் என்று சிலர் பெண்ணைப் பிடித்து, கட்டி வந்தனர் - கட்டிக்
கொண்டு வந்தார்கள், கட்டொடும் கொண்டு போய்க் களத்தில்
வெட்டுவித்திடு என்று - கட்டிய கட்டோடு கொண்டுபோய்க் கொலைக்
களத்தில் இவளை வெட்டும்படி செய்துவிடுவாய் என்று, காசியர் வேந்தன்
ஈந்தனன் - காசி நகரத்து மன்னன் கொடுத்தான்.
'இவள் குழந்தையைக் கொன்றனள் என்று பார்த்துக் கட்டிக்
கொண்டு வந்தனர் காவலர்; ஆதலால், இவளைக் கொலை செய்க'
என்றான் அரசன். 'வெட்டுவித்திடு' என்றது பிறவினை. வெட்டும்படி செய்
என்றான். அவன் தலைவனாதலால் பணியாட்கள் இருப்பரெனக் கருதிக்
கூறிய கூற்று இது. இழிதொழிலன் ஆயினும் அவனைத் தலைவனென
மதித்து அங்ஙனம் கூறினன் அரசன் எனக் கொள்க.
(103)
| 1080. |
மின்னைக்
கைக்கொண்டு கட்டினை இறுகுற விசித்து
மன்னைக் கைதொழுது ஏத்தித்தன் சேரியில் வந்து
பின்னைத் தன்வயின் விலைப்பட்ட அயோத்தியர் பெருமான்
தன்னைக் கூவியே அவன்கையில் தையலைக் கொடுத்தான். |
(இ - ள்.) மின்னைக் கைக்கொண்டு
- மின்னல் போன்ற இடை
யினையுடைய பெண்ணைப் பற்றிக்கொண்டு, கட்டினை இறுகுற விசித்து -
முன் கட்டிய கட்டினை மேலும் இறுகுமாறு இழுத்துக் கட்டி, மன்னைக்
கைதொழுது ஏத்தி - மன்னனைக் கைகளால் வணங்கி வாழ்த்தி, தன்
சேரியில் வந்து - தன் புலைச்சேரியிலே வந்து, பின்னை தன்வயின்
விலைப் பட்ட அயோத்தியர் பெருமான் தன்னைக் கூவி - பிறகு
தன்னிடத்தில் விலைபட்டிருக்கும் அயோத்தி மாநகரத்து மன்னனை
அழைத்து, அவன் கையில் தையலைக் கொடுத்தான் - அவனிடத்தில்
அப் பெண்ணைக் கொடுத்தான்.
உடனே வீரவாகு நன்றாக இறுகக் கட்டிக்கொண்டுபோய்த்
தன்
பணியாளனாகிய அரிச்சந்திரன் வசம் ஒப்புவித்தான் என்பது.
(104)
| |
வீரவாகு
தன் பணியாளனாகிய அரிச்சந்திரன் வசம்
சந்திரமதியை
ஒப்புவித்தல்
|
| 1081. |
பிள்ளை
யைக்கொடு போயுடல் பிளந்துயிர் தொலைத்த
கள்ளி யைக்கொலைக் களத்திடைக் கொண்டுபோய்க் கவந்தம் |
|