|
(இ
- ள்.) முன்னை நாள் அரசாண்டு அணி முடி புனைந்திருந்த
- முற்காலத்தில் அரசாட்சி செய்து அழகிய முடியைப் புனைந்துகொண்டு
இருந்த, மன்னர் செய்கையும் அறங்களும் திறங்களும் வளர்ந்த -
மன்னருடைய செயல்களும் அறங்களும் பல சிறப்புகளும் வளர்ந்து
புகழைத் தந்தன, இன்னமும் குறைந்து உயிர் தரித்து இருந்தவர் இல்லை
- அறச்செயல்களில் குறைந்து உயிர் பெற்றிருந்தவர் உன் குலத்தவர்
ஒருவரும் இல்லை, அன்னதே துணிபு அடியனேற்கு இரங்கலை என்றாள்
- அதுவே முடிவாகும், எனக்காக நீ இரங்கி நீதி தவற வேண்டாம்
என்றாள்.
'பண்டைக்காலம் பாராண்ட மன்னர் நெறிமுறை தவறாது நின்றனர்'
என்று பல மன்னர் வரலாறு கூறினள். 'நெறி பிழைத்து உயிர் பிழைத்து
வாழ்ந்த மன்னர் இலர். ஆதலால் நெறிதவறாது கொலை செய்க' என்றாள்
சந்திரமதி.
(107)
| |
மந்திரி
வந்து துயர் நிகழ்ச்சியைக் கேட்டல் |
| 1084. |
அக்க
ணத்தினில் அமைச்சனும் விரையவந்(து) அணுகிப்
புக்க வாறெலாம் புரவலன் புகன்றிடக் கேட்டுப்
பக்க நோக்கியே மன்னனைப் பணிந்துயிர் பதைக்க
ஒக்க வேகியே சுடர்மணித் தெருவில்வந் துற்றான். |
(இ - ள்.) அக் கணத்தினில் அமைச்சனும்
விரைய வந்து
அணுகி - அந்த நேரத்தில் அமைச்சனும் விரைவாக வந்து சேர்ந்து,
புக்கவாறு எலாம் புரவலன் புகன்றிடக் கேட்டு - நடந்த செய்திகளெல்லாம்
மன்னன் கூறக் கேட்டு, பக்கம் நோக்கியே மன்னனைப் பணிந்து -
பக்கத்திலிருந்து பார்த்து மன்னனை வணங்கி, உயிர் பதைக்க ஒக்க
ஏகியே சுடர் மணித் தெருவில் வந்து உற்றான் - உயிர் பதைக்குமாறு
ஒன்றாகச் சென்று ஒளி வீசும் தெருவில் வந்து சேர்ந்தான்.
அவ்வமயம் சத்தியகீர்த்தியும் வந்து கண்டான்;
நிகழ்ந்த செய
லனைத்தும் கூறக் கேட்டான்; என் செய்வான் பாவம்! ஒன்றும் கூறாது
தெருவில் வந்து நின்றான்.
(108)
| 1085. |
இடக்கை
பாசமும் ஏதியும் பிடித்திட வலத்துத்
தடக்கை பற்றிய சவஞ்சுடு கோலினால் தள்ளிச்
சுடர்த் தெருத்தனில் தோன்றிடத் துணுக்கமுற் றேங்கி
மடக் கொடித்திரு மாதரும் மைந்தரும் உரைப்பார். |
(இ
- ள்.) இடக்கை பாசமும் ஏதியும் பிடித்திட - இடக்கையிலே
கயிறும் வாளும் பற்றிக்கொண்டு, வலத்துத் தடக்கை பற்றிய - வலக்
கையில் பிடித்த, சவஞ்சுடு கோலினால் தள்ளி - பிணத்தைச் சுடுகின்ற
கோலினாலே சந்திரமதியைத் தள்ளிக்கொண்டு, சுடர்த் தெருத்தனில்
தோன்றிட - ஒளிவீசும் தெருவிலே வந்து சேர, மடக்கொடித் திருமாதரும்
மைந்தரும் - இளங்கொடி போன்ற பெண்களும் ஆடவரும், துணுக்கமுற்று
ஏங்கி உரைப்பார் - நடுக்கங்கொண்டு வருந்திப் பேசத் தொடங்கினர்.
|