|
வீரவாகுவின்
பணியாளாகிய அரிச்சந்திரன் தன் மனைவியைக்
கட்டி இழுத்துக்கொண்டு தெருவழியே கொலைக்களஞ் செல்கின்றான்!
அக்காட்சி கண்ட மாந்தர் பலரும் வருந்தி அடியில் வருமாறு
கூறுகின்றனர்.
(109)
சந்திரமதியைக்
கொலைக்களத்திற்குக் கொண்டுபோவது கண்ட
நகர
மாந்தர் கூற்று
| |
எழுசீர்க்
கழிநெடிலடிச் சந்த விருத்தம்
|
| 1086. |
கையோ
செழுங்கமலம் முகமோ நிறைந்தமதி
காலோ இளஞ்சினை வரால்
மெய்யோ கலாபமயில் இடையோ நுடங்குகொடி
விழியோ கடைந்த வடிவேல்
மையோ சுருண்டகுழல் மலையோ திரண்டமுலை
வனிதைக் கெனப்புகலு வார்
ஐயோ இவட்குவிதி கொலையோ எனக்கதறி
யழுவார் அறைந்து விழுவார். |
(இ - ள்.) வனிதைக்கு கையோ செழுங்
கமலம் -
இப்பெண்ணுக்குக் கையோ செழுமையான தாமரை மலர்போல் உள்ளது,
முகமோ நிறைந்த மதி - முகமோ முழு நிலவுபோல் உள்ளது, காலோ
இளஞ்சினை வரால் - கால்களோ இளமையான சினை கொண்ட வரால்
மீன்கள்போல் இருக்கின்றன, மெய்யோ கலாப மயில் - உடம்போ தோகை
மயில்போல் தோன்றுகிறது, இடையோ நுடங்கு கொடி - இடையோ
அசைகின்ற பூங்கொடிபோல் உள்ளது, விழியோ கடைந்த வடிவேல் -
கண்களோ கடைந்தெடுத்த கூர்மையான வேல்போல் இருக்கின்றன,
மையோ சுருண்ட குழல் - சுருண்ட கூந்தல் மேகம் போல் இருக்கின்றது,
மலையோ திரண்ட முலை - திரண்ட முலைகள் மலைகள்போல்
இருக்கின்றன, எனப் புகலுவார் - என்று சொல்லுவார்கள், ஐயோ இவட்கு
விதி கொலையோ எனக் கதறி அழுவார் அறைந்து விழுவார் - ஐயோ!
இவளுக்கு விதியானது கொலைதானோ என்று கதறி அழுவார்கள்,
முகத்தில் அறைந்துகொண்டு விழுவார்கள்.
'அழகிற் சிறந்த இப்பெண்ணுக்கு இளமையிலேயே கொலைத்
தண்டனையா லிறக்கும்படி விதியமைந்துளதோ? இதுவென்ன பாவம்!'
என்று சிலர் கூறிக் கதறி அழுதனர்.
(110)
| 1087. |
தவளத் திருத்தரள
நகையுஞ் சிறந்தவிரு
தனுவைப் பழித்த நுதலும்
பவளத்தை ஒத்தகனி இதழும் படைத்தவிதி
பதறிப் படைத்த துளதோ
கவளக் களிற்றரச னுலகத் துயிர்க்குதவு
கபடற் றிரக்க முடையோன்
இவளைக் கொலக்கருதி இவர்கைக் கொடுத்ததிறம்
ஏதென் றிரங்கி அழுவார். |
|