|
| 1089. |
மறையோ னிடத்திவளை
விலைகூறி மிக்கவொரு
மகனோடும் விற்றவ னிவன்
குறையோ பொருட்செலவு தெரியாது மற்றுமொரு
கொடியோன் அலக்கண் உறவே
பறையோ னிடத்திவனை விலைகூறு விற்றுமுளன்
பலநாள் கழித்த தறிவேம்
இறையோன் மகற்கிறுதி செயலால் இவர்க்குவரும்
இடையூறி(து) என்றுரைசெய் வார். |
(இ
- ள்.) மறையோன் இடத்து இவளை விலை கூறி மிக்க ஒரு
மகனோடும் விற்றவன் இவன் - ஒரு பிராமணனிடத்தில் இவளை விலை
கூறி ஒரு மகனோடும் விற்றவன் இவன்தான், குறையோ பொருட் செலவு
தெரியாது - இவர்களுக்கு வந்த குறை என்னவோ? என்ன பொருள்
செலவோ தெரியாது, மற்றும் ஒரு கொடியோன் அலக்கண் உறவே
பறையோன் இடத்து இவனை விலை கூறி விற்றும் உளன் - வேறு ஒரு
கொடியவன் இவன் துன்பப்படும்படி பறையனிடத்தில் இவனை விலை
கூறி விற்றிருக்கின்றான். பல நாள் கழித்தது அறிவேம் - இவை நடந்து
பல நாட்களாயின நங்கள் அறிவோம், இறையோன் மகற்கு இறுதி
செயலால் இவர்க்கு வரும் இடையூறு இது என்று உரை செய்வார் -
மன்னனுடைய மகனைக் கொன்றதனால் இவர்களுக்கு வந்த இடையூறு
இது என்று கூறுவார்கள்.
'ஒரு
மறையோனுக்கு இவளையும் இவள் மகனையும் பல நாட்க
ளுக்குமுன் விற்றவன் இவன்தான்; இவனை யொருவன் விலை கூறிப்
பறையனுக்கு விற்றுவிட்டான்; இச்செய்தி எங்கட்குத் தெரியும்; காரணம்
என்னோ அறியோம்! நம்மரசன் மகனைக் கொன்றதனால் இந்த விதி
இவளுக்கு வந்ததுபோலும்! என்றும் சிலர் கூறுவர்.
(113)
| 1090. |
எங்கோ மகன்கதற
உயிருண்ட கொலைகாரி
இவளோ எனத்தொ டருவார்
வெங்கோப வன்கரியின் முன்போடும் என்றுசிலர்
வெகுள்வார் நெருக்கி யடர்வார்
பங்கோ பறைக்கிவளை வதைசெய்தல் நம்படை
படாதோ எனப்ப தறுவார்
செங்கோல் முறைக்குவழு நீர்கொல்வ தென்றுசிலர்
செயலால் விலக்கி வருவார். |
(இ - ள்.) எம் கோ மகன் கதற
உயிர் உண்ட கொலைகாரி
இவளோ எனத் தொடருவார் - எம் மன்னன் மகன் கதறி அழும்படி
உயிர்க்கொலை செய்த கொலைகாரி இவள்தானோ எனத் தொடர்ந்து
செல்வார்கள், வெங் கோப வன் கரியின் முன் போடும் என்று சிலர்
வெகுள்வார் - கொடிய கோபத்தையுடைய வலிய யானையின் முன்
போடுங்கள் என்று சிலர் கோபங்கொள்வார்கள், நெருக்கி அடர்வார் -
சிலர் நெருக்கி வருத்துவார்கள், பறைக்கு இவளை வதை செய்தல்
பங்கோ - பறையன் இவளை வதைசெய்யும்படி செய்தல் உரிமையோ,
நம் படை படாதோ எனப்
|