பக்கம் எண் :


529

பதறுவார் - நம்முடைய ஆயுதம் அவளைக் கொல்லாதோ எனப்
பதறிக்கொண்டு செல்வார்கள், நீர் கொல்வது செங்கோல் முறைக்கு வழு
என்று சிலர் செயலால் விலக்கி வருவார் - நீர் இவளைக் கொல்வது
செங்கோல் முறைக்கு வழுவாகும் என்று சிலர் சொல்லி அவரை விலக்கி
வருவார்கள்.

     'நம் மன்னன் மகனைக் கொன்றவளா இவள்!' என்றும், 'இவளை
யானைக்குமுன் போட்டுக் காலால் இடறுவித்துக் கொல்லவேண்டும்!'
என்றும், 'பறையன் இவளைக் கொல்லவேண்டுமோ! நாமே வெட்டிப்
போட்டாலென்ன?' என்றும் கூறி நெருங்கினர் பலர்; அப்போது சிலர்
'நீங்கள் வெட்டுவது அறநெறி யன்று' என்று விலக்கினர் என்பது.
                                                   (114)

 
1091. அழியாத காசிபதி மகனாவி கொண்டஇவள்
   அநியாய காரி அசடி
பழிபூணி இங்ககலின் எளிதாய் விடாதுநமர்
   பலராவி யும்ப ருகுவாள்
விழியால் எறிந்துமுயிர் கவர்வாள் முகத்திலெதிர்
   விழியாது நில்லு மெனவே
மொழிவார் வதைத்திடுகை பொருளாக அற்பமனம்
   முசியாள் எனப்ப கருவார்.

       (இ - ள்.) அழியாத காசி பதி மகன் ஆவி கொண்ட இவள்
அநியாயகாரி அசடி - அழியாது நீண்ட நாள் வாழக்கூடிய காசி மன்னன்
மகனுடைய உயிரைக் கொன்ற இவள் ஒழுங்கற்றவள் கீழ்மைக்குணம்
உடையவள், பழி பூணி - பழிச்செயல் செய்பவள், இங்கு அகலின் எளிதாய்
விடாது நமர் பலர் ஆவியும் பருகுவாள் - இவ்விடத்தினின்று சென்றால்
எளிதாக நம்மை விடாமல் நம் பலருடைய உயிரையும் கவர்ந்து விடுவாள்,
விழியால் எறிந்தும் உயிர் கவர்வாள் - கண்ணால் எறிந்தும் நம் உயிரைக்
கவர்ந்துவிடுவாள், முகத்தில் எதிர் விழியாது நில்லும் எனவே மொழிவார்
- இவள் முகத்தின் எதிரில் விழியாமல் நில்லுங்கள் என்று கூறுவார்கள்,
வதைத் திடுகை பொருளாக அற்ப மனம் முசியாள் எனப்பகருவார் -
இவளைக் கொல்வதை அறிந்தும் அற்பமாக நினைத்து வருந்தாமல்
இருக்கின்றாள் என்று கூறுவார்கள்.

     'பிள்ளையைக் கொன்ற கள்ளி இவள். இவளிருந்தால் பலருயிரையும்
உண்பாள்; ஆதலால், இவள் முகத்தில் விழிப்பதுகூடப் பாவம்; விலகி
வாருங்கள்; கொல்வதற்குக் கொண்டுபோவதறிந்தும் சிறிது மனங்கலங்காம
லிருப்பதைக் காணுங்கள்' என்பார் சிலர்.
                                                    (115)

 
1092. தப்பாது மன்மகனை உயிர்கொண்டு திரமுண்ட
   தறுகண் அரக்கி நமர்தங்
கைப்பாசம் உற்றுவர வலளோ விசும்பினிடை
   கரவா திருத்தல் இலளே