பக்கம் எண் :


53


        அரிச்சந்திரன் அரசிருக்கை

   
           வேறு

   
       கலி விருத்தம்
95. அத்திரு நகர்க்குணிரை ஆயிரம் மணித்தூண் பத்திகளும் அத்தொகைய பைம்பொனுறு கோயிற்
சித்திர மணித்தவிசின் முத்தணி செழும்பொற்
சத்திர நிழற்றவரிச் சந்திரன் இருந்தான்.

     (இ - ள்.) அத்திரு நகர்க்குள் - அந்த அழகிய அயோத்திமா
நகரில், நிரை ஆயிரம் மணித் தூண் பத்திகளும் - வரிசையாக
நிறுத்தப்பட்ட ஆயிரம் இரத்தினத்தூண் மண்டபவரிசைகளும்,
அத்தொகைய பைம்பொன் உறு கோயில் - அவ்வெண்ணமைந்த
மண்டபங்கள் அமைந்த பசுமையான பொன்னாற்செய்த அரண்மனையில்,
சித்திர மணித் தவிசில் - அழகிய இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற
சிம்மாசனத்தில், முத்தணி செழும் பொன் சத்திரம் நிழற்ற - முத்தினால்
அழகுறச் செய்யப்பெற்ற பொன் தண்டு தாங்கிய வெண்கொற்றக் குடை
நிழலில், அரிச்சந்திரன் இருந்தான் - அரிச்சந்திரன் வீற்றிருந்தான்.

     நிழற்ற : வினையெச்சம் ; நிழல் : பகுதி. ஆயிரந் தூண்கள் அமைந்த
ஆயிரமண்டபங்களமைந்த அரண்மனை எனக் கொள்க. கோயில் -
அரண்மனை. சத்திரம் - குடை செழும் பொன் - செழித்த பொன்னாற்
செய்த : இது பொன்னாற் காம்பு சமைக்கப்பட்டது என்பதைக் காட்ட
வந்தது.
                                                    (22)

 
     அரிச்சந்திரன் வீற்றிருந்த சிறப்பு
96. என்னதிஃ தென்னதிஃ தென்றிருகை கூப்பி
மன்னவர் இடும்திறைகள் வந்தினித ளப்பத்
துன்னுமறை யோர்கள்பலர் சோதிடம்உ ரைப்ப மன்னுகவி வாணர்பலர் மங்கலம்இ யம்ப.

     (இ - ள்.) மன்னவர் இரு கை கூப்பி வந்து என்னது இஃது
என்னது இஃது என்று இடுந் திறைகள் இனிது அளப்ப - ஒருபுறம்
அரசர்கள் இரு கை குவித்து வணங்கி வந்து என்னுடைய திறைப் பொருள்
இஃது என்னுடைய திறைப்பொருள் இஃது என்று தாங்கள்
செலுத்தவேண்டிய திறைப்பொருள்களை மகிழ்ச்சியோடு அளந்து
செலுத்திக்கொண்டிருப்பவும், துன்னு மறையோர்கள்பலர் சோதிடம்
உரைப்ப - (ஒருபக்கம்) நெருங்கிய பல அந்தணர் காலக்கணி கூறவும்,
மன்னு கவி வாணர் பலர் மங்கலம் இயம்ப - ஒருபுறம் நிலை பெற்ற
புலமை வாய்ந்த கவிஞர் பலர் மங்கலப் பாடல்கள் பாடிக்
கொண்டிருக்கவும் (அரிச்சந்திரன் வீற்றிருந்தான்.)

     எண்ண என்னாது அளப்ப என்றதனால் திறைப்பொருள் மிகுதி
பெற்றாம். அடுக்குப் பன்மைமேற்று. இனிது என்றதனால் நியாயமான
திறைப்பொருள் என்பது பெறப்படும். இது முதல் எட்டுச் செய்யுள்கள்