|
| |
அரிச்சந்திரன்,
சந்திரமதி மறுப்புரை |
| 1103. |
சேய்மை அண்மையில்
உயிர்க்கொரு துணையெனச் சிறந்த
வாய்மை யால்அகம் தூய்மையாம் மற்றிலை புறத்தைத்
தூய்மை செய்வது நீரலாற் சொல்லின்வே றுளதோ
நோய்மை செய்யினும் வாய்மையே நோன்பெமக் கறிதி. |
(இ
- ள்.) சேய்மை அண்மையில் உயிர்க்கு ஒரு துணையெனச்
சிறந்த - தூரத்திலும் அருகிலும் உயிருக்கு ஒரு துணை என்னும்படி சிறந்த,
வாய்மையால் அகம் தூய்மையாம் - உண்மை பேசுவதால் மனம் தூய்மை
அடையும், மற்று இலை - வேறு ஒன்றும் துணை இல்லை, புறத்தைத்
தூய்மை செய்வது நீர் அலால் சொல்லின் வேறு உளதோ - உடம்பின்
வெளிப்பகுதியைத் தூய்மைப்படுத்துவது நீரே யல்லாது வேறு பொருள்
உண்டோ, நோய்மை செய்யினும் வாய்மையே நோன்பு எமக்கு அறிதி -
துன்பங்கள் பலவற்றை நீ செய்தாலும் உண்மை பேசுதலே எமக்கு
விரதமாகும், இதனை நீ அறிவாயாக.
ஒருவனுக்குத்
துணைவர் நெடுந்தூரத்திலும் இருப்பர்; அண்மையிலும்
இருப்பர். இடையூறு நேர்ந்தபோது விரைந்துவந்து வேண்டுவன செய்வர்.
அதுபோல உயிருக்குத் துணையாவது வாய்மையாம் என்பது.
(127)
| 1104. |
புலைய
னும்விரும் பாதவிப் புன்புலால் யாக்கை
நிலையெ னாமருண் டுயிரினும் நெடிதுறச் சிறந்தே
தலைமை சேர்தரு சத்தியம் பிறழ்வது தரியேம்
கலையு ணர்ந்தநீ யெமக்கிது கழறுவ தழகோ. |
(இ - ள்.) புலையனும் விரும்பாத
இப் புன்புலால் யாக்கை -
புலைத்தொழில் புரிவோனும் விரும்பாத புலால் நாற்றமுடைய இந்த
அற்பமான உடம்பு, நிலை எனா மருண்டு - நிலையானது என்று மயங்கி,
உயிரினும் நெடிதுறச் சிறந்தே தலைமை சேர்தரு - உயிரைக்காட்டிலும்
மிகப் பெரிதாகச் சிறந்து தலைமைவாய்ந்த, சத்தியம் பிறழ்வது தரியேம் -
உண்மைக்கு மாறுபட்டு நடக்கவேண்டுமென்று நீ கூறுவதை நாங்கள்
ஏற்றுக்கொள்ளமாட்டோம், கலை உணர்ந்த நீ எமக்கு இது கழறுவது
அழகோ - கலைகள் எல்லாவற்றையும் கற்ற நீ எமக்கு இதனைக் கூறுவது
அழகு ஆகுமா?
'உயிர் நீங்கினும் வாய்மை தவறமாட்டோம்!' என்று மறுத்துரைத்தனர்
அரிச்சந்திரனும் அவன் மனைவியும் என்பது கருத்து.
(128)
| 1105. |
இம்மை அம்மைவீ
டெனமறை புலங்கொள இயம்பும்
மும்மை யுந்தரும் முறையுடைத் தெனுநிலை முரணி
எம்மை யாழ்வயிற் றடக்கிமீட் டுமிழ்கிலா எரிவாய்
வெம்மை கூர்நரகு உய்க்கினும் மெய்ம்மையை விடேமால். |
(இ
- ள்.) இம்மை அம்மை வீடு என மறை புலம் கொள
இயம்பும் - இப்பிறப்பு மறுபிறப்பு வீட்டுலகம் என வேதங்கள் நாம்
அறிவதற்கு
|