|
(இ
- ள்.) தாதின் தோன்றிய தண் துழாய் தார் முகில் - மகரந்தப்
பொடியுடன் கூடித் தோன்றிய குளிர்ந்த துழாய் மாலையை அணிந்த
மேகம்போன்ற திருமாலின், நாபிப் போதில் தோன்றிய நான்முகத்து ஒரு
தனிப் புத்தேள் - உந்தியந் தாமரை மலரில் தோன்றிய நான்கு
முகங்களையுடைய அயன் என்னும் தேவன், ஓதில் தோன்றிய
வாணியோடு - மறை நூலோடு தோன்றி விளங்கும் கலை மகளோடு,
ஓதிமப் புள்ளின் மீதில் தோன்றினன் - அன்னப்பறவையின்மேல்
தோன்றினான், விண்ணவர் யாவரும் வந்தார் - தேவர் அனைவரும்
அங்கு வந்தனர்.
'ஒத்து'
என்பது மறை நூல்; மறை நூலைக் கையில் பிடித்தவளாய்க்
கலைமகள் தோன்றினாள் என்பது கருத்து ஒத்து - ஓது எனத் தொகுத்தல்
விகாரம் பெற்றது. 'ஓது' என்னும் முதனிலையே தொழிற் பெயராய் அஃது
ஆகுபெயர்ப் பொருளைத் தந்தது எனக் கொள்ளலுமாம். ஓது + இல் =
ஓதில் - வேதத்தில் தோன்றிய வாணி எனக் கொள்க.
(9)
| |
பதினெண்
கணங்களும் வருதல் |
| 1122. |
சித்தர்
கின்னரர் கிம்புரு நாரதர் தேவர்
பத்தர் தானவர் கருடகந் தருவர்கள் பசாசர்
பித்தன் தன்னொடும் மாலொடும் பிதாமக னோடும்
மெய்த்து வந்திரைந் தீண்டினர் மேதினி மிசையே. |
(இ - ள்.) சித்தர் கின்னரர்
தும்புரு நாரதர் தேவர் -
சித்தர்களும் கின்னரர்களும் தும்புரு நாரதர் என்னும் முனிவர்களும்
தேவர்களும், பத்தர் தானவர் கருட கந்தருவர்கள் - பத்தியுடையவர்களும்
தானவரும் கருடரும் கந்தருவரும், பசாசர் - பசாசக் கூட்டத்தாரும்,
பித்தன் தன்னொடும் மாலொடும் பிதா மகனோடும் - சிவன் திருமால்
அயனோடும், மெய்த்து வந்து இரைந்து ஈண்டினர் மேதினி மிசையே -
மெய்ச்சிக்கொண்டு வந்து பேரொலி செய்து இப் பூமியின்மேல் வந்து
நெருங்கி நிறைந்தனர்.
கின்னரர் கந்தருவர் முதலியோர், பதினெண் வகைத்
தேவர்
கூட்டத்தைச் சேர்ந்தவர். இவர்களும் சிவன் திருமால் பிரமன் வரும்
போதே வந்து கூடினர் என்பது.
(10)
| |
சூரியன்
சந்திரன் முதலிய பலரும் வருதல் |
| 1123. |
சந்தி ராதித்தர்
வைரவர் சத்தமா தர்களோ(டு)
இந்தி ராதியர் எண்மர்மா முனிவரர் இயக்கர்
மந்த ரப்புயத் திரதிதோய் வேனில்வேள் மற்றோர்
அந்த ரத்தினை மறைத்துவந் தாவயின் அடைந்தார். |
(இ
- ள்.) சந்திர ஆதித்தர் வைரவர் - சந்திரனும் கதிரவனும்
வைரவரும், சத்த மாதர்களோடு இந்திராதியர் எண்மர் - ஏழு
மாதர்களுடனே இந்திரன் முதலான எட்டுத் திசைக் காவலரும், மா
முனிவரர் இயக்கர் -
|