பக்கம் எண் :


548

     (இ - ள்.) நாரி பாகனை முகுந்தனை நான்முகத்தோனை - உமா
தேவியை இடப்பாகத்திலுடைய சிவபெருமானையும் திருமாலையும் நான்கு
முகங்களையுடைய பிரமதேவனையும். மூரி வேலனை விநாயக
மூர்த்தியைப் பணிந்தான் - வலிமை வாய்ந்த வேலாயுதத்தையுடைய
முருகப்பெருமானையும் விநாயகமூர்த்தியையும் வணங்கினான், பூரை பூரை
என்று இரு கையால் அமைத்த புத்தேளிர் - போதும் போதும் என்று
இரு கைகளாலும் அரிச்சந்திரனை வாழ்த்தி அமையச் செய்த தேவர்கள்,
யாரை யாரை என்று அறிந்து யாம் விளம்புதும் அம்மா - யார் யார்
என்று யாம் அறிந்து விளம்புதல் இயலுமோ!

     சிவன், திருமால், பிரமன், முருகன், விநாயகன் ஆகிய கடவுளரை
வணங்கினன். அப்போது மற்றைத் தேவர்களும் 'போதும்; போதும்!' என்று
கையமைத்தனர். யார் யார் கையமைத்தனர் என்று கூறவியலாது
பெருங்கூட்டமாதலின் என்றார் ஆசிரியர்.
                                                    (16)

 
1129. மீட்டு மன்னவன் விமலனைத் தொழுதிவண் மிடைந்த
கூட்ட மாயுளார் யாவர்க்கும் ஆகெனக் குறித்தான்
நீட்டும் பல்சினைக் கமைவதன் றோநெடு முதலில்
ஊட்டும் நீரவ ரனைவர்க்கு முளங்குளிர்ந் தன்றே.

       (இ - ள்.) மீட்டும் மன்னவன் விமலனைத் தொழுது - மறுபடியும்
மன்னன் சிவபெருமானை வணங்கி, இவண் மிடைந்த கூட்டமாய் உளார்
யாவர்க்கும் ஆக எனக் குறித்தான் - இவ்விடத்தில் நெருங்கிக்
கூட்டமாயிருக்கின்ற தேவர்கள் எல்லோருக்கும் இவ் வணக்கம்
உரியதாகுக என்றான், நெடு முதலில் ஊட்டும் நீர் - மரத்தினுடைய
அடிப் பாகமாகிய வேரில் விடுகின்ற நீர், நீட்டும் பல் சினைக்கு
அமைவது அன்றோ - நீண்ட பல கிளைகளுக்கும் வந்து பொருந்துவது
உண்மையன்றோ, அவர் அனைவர்க்கும் உளம் குளிர்ந்தன்றே -
அதுபோலச் சிவனுக்குச் செய்த வணக்கம் அங்கிருந்த தேவர்
எல்லோருக்கும் மனம் குளிர்ச்சி யடைவித்தது.

     சிவபெருமான் மரத்தின் வேர்போலவும், மற்றைத் தேவர்கள் கிளை
முதலியன போலவும் இருத்தலாக இங்குக் குறிப்பிட்டது. இறைவனுக்கும்
மற்றைத் தேவர்க்கும் உள்ள தொடர்பை விளக்கியவாறு இது. இந்த
உவமை பாராட்டத்தக்கது. இஃது உவமையணி.
                                                    (17)

 
            சிவனைத் துதித்தல்
1130. ஐய னேயெமை வழிவழி யடிமைகொண் டருள்கூர்
செய்ய னேசிவ லோகனே சுருதியின் சிரத்தின்
மெய்ய னேயுனை விழிகளாற் கண்டுவீழ்ந் திறைஞ்சி
உய்ய நாயினேன் புரிதவம் உணர்கிலேன் என்றான்.

     (இ - ள்.) ஐயனே எமை வழிவழி அடிமைகொண்டு அருள்கூர்
செய்யனே - தலைவனே! எங்களைப பரம்பரை வழிவழியாக அடிமை
யாகக்கொண்டு அருள்புரிந்த சிவப்பு நிறத்தையுடையவனே!, சிவ லோகனே
சுருதியின் சிரத்தின் மெய்யனே - சிவலோகத்தில் உறைபவனே!
வேதத்தின்