|
முடியில் விளங்கும்
உண்மைப் பொருளானவனே!, உனை விழிகளால்
கண்டு வீழ்ந்து இறைஞ்சி உய்ய - உன்னை என் கண்களால் கண்டு
விழுந்து வணங்கி மேன்மையடைய. நாயினேன் புரிதவம் உணர்கிலேன்
என்றான் - நாயினும் கடையேனாகிய நான் செய்த தவம் என்ன என்று
அறியாது இருக்கின்றேன் என மன்னன் கூறினான்.
பணிந்தெழுந்து
நின்று சிவபெருமானை நோக்கி 'ஐயனே!..............
மெய்யனே! உன்னை என் ஊனக்கண்களாற் கண்டு வணங்குவதற்கு நான்
என்ன தவஞ்செய்தேனோ அறியேன்!' என்று துதித்தான்.
(18)
| |
அம்பிகையைச்
சந்திரமதி வணங்கலும் அவள் தழுவுதலும் |
| 1131. |
தையல்
அம்பிகை தனைத்தொழும் சந்திர வதியைக்
கையி னாலெடுத் தாங்கவள் கற்பினைப் புகழ்ந்தாள்
துய்ய முப்பதிற் றிரண்டறம் வளர்த்தகை தொடலும்
மெய்கு ழைந்தது தழைந்தது பேரின்ப வெள்ளம். |
(இ - ள்.) தையல் அம்பிகை தனைத்
தொழும் சந்திரவதியை -
தையல் வடிவத்தில் இருக்கும் அம்பிகை தன்னை வணங்கிய
சந்திரமதியை, கையினால் எடுத்து ஆங்கு அவள் கற்பினைப் புகழ்ந்தாள்
- கையினால் எடுத்து அவளுடைய கற்பின் திறத்தைப் புகழ்ந்து
பேசினாள், துய்ய முப்பதிற் றிரண்டு அறம் வளர்த்த கை தொடலும் -
தூய்மையான முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்த உமாதேவியின்
கைகள் தொட்டவுடனே, மெய் குழைந்தது பேரின்ப வெள்ளம் தழைந்தது
- உடம்பு குழைவு அடைந்தது, பெரிய இன்ப வெள்ளம் தழைக்தோங்கி
வளர்ந்தது.
உமாதேவி முப்பத்திரண்டு அறங்களைச்செய்து உலக
மக்களுக்கு
வழிகாட்டியதாக நூல்கள் கூறுகின்றன. அறங்கள் பலவற்றைச் செய்த
பெரியோருடைய கைகளால் தொடப் பெறுதல் பெரும் பேறாகும்.
ஆதலால், சந்திரமதி பேரின்பம் அடைந்தாள் என்றார்.
(19)
| |
முருகன்
தேவதாசனை உயிர்பெற்றெழச் செய்தல் |
| 1132. |
மயிலை முற்செல
நடத்தியே வரைபக வெறிந்தோன்
அயிலெ டுத்தசெங் கையினால் வருகெனா அழைக்கக்
குயின்மொ ழிச்செழுங் குதலைவாய் அரசிளங் குமரன்
துயிலு ணர்ந்தவர் போற்புகுந் திணையடி தொழுதான். |
(இ
- ள்.) மயிலை முன் செல நடத்தியே வரை பக எறிந்தோன்
- மயில் வாகனத்திலேறித் தேவதாசன் கிடக்குமிடத்தின் முன் செல்லும்
படி நடத்தி, கிரவுஞ்சம் என்னும் மலை பிளக்கும்படி வேல் எறிந்த
முருகக்கடவுள், அயில் எடுத்த செங்கையினால் வருக என அழைக்க -
வேலைக் கையில் பிடித்த சிவந்த கையினால் அவனை வருக என
அழைத்தபோது, குயில் மொழிச் செழுங் குதலை வாய் அரசிளங் குமரன்
- குயில் போன்ற மென்மொழி பேசும் சந்திரமதி பெற்றெடுத்த
குதலைமொழி
|