|
பேசுகின்ற அரசிளங்குமரனாகிய
தேவதாசன், துயில் உணர்ந்தவர்போல்
புகுந்து இணையடி தொழுதான் - தூக்கத்திலிருந்து எழுந்தவர்போல
எழுந்து சென்று முருகப்பெருமானுடைய இரண்டு திருவடிகளையும்
வணங்கினான்.
முருகன்மயில்
வாகனத்திலேறித் தேவதாசன் கிடக்குமிடஞ் சென்று,
வேல் பிடித்த கையால் வாவென அழைக்க, அவன் உயிர்பெற்று வந்து
வணங்கினான் என்பது.
(20)
| |
காசி
மன்னன் மைந்தன் இறந்தவன் உயிர் பெற்று வருதல் |
| 1133. |
வேலன் கூயசேய்
துணைஎனக் காசியர் வேந்தன்
பாலன் ஆவிபெற் றெழுந்துபோய் முருகனைப் பணிந்தான்
சீல மேவுமிச் சிறுவரோர் இருவரும் சிறப்பின்
கால காலனும் தேவரும் நிற்பது கண்டார். |
(இ - ள்.) வேலன் கூய சேய் துணையென
காசியர் வேந்தன்
பாலன் ஆவிபெற்று எழுந்து போய் - முருகப்பெருமானால் அழைக்கப்
பெற்ற தேவதாசனுடைய துணைவன் என்னும்படி காசி வேந்தனுடைய
மகனும் உயிர்பெற்று எழுந்து போய், முருகனைப் பணிந்தான் - முருகப்
பெருமானை வணங்கினான், சீலம் மேவும் இச் சிறுவர் ஓர் இருவரும் -
ஒழுக்கம் மிகுந்த இச் சிறுவர் இருவரும், சிறப்பின் கால காலனும்
தேவரும் நிற்பது கண்டார் - சிறப்பினையுடைய சிவபெருமானும் மற்றைத்
தேவர்களும் அங்கு நிற்பதைக் கண்டார்கள்.
கால காலன் - எமனுக்கும் எமன், எமனை வென்றவன்,
காலத்தை
வென்றவன் எனப் பல பொருள்படும். காலம் கடந்து, இறப்பின்றி, என்றும்
இருக்கும் கடவுள் என்பது பொருள். அடுத்துக் காசி மன்னன் மகனும்
அவன் துணைவன்போல எழுந்து வந்தான். இருவரும், தேவர்களும்
சிவனும் வந்து நிற்பது கண்டார்கள்.
(21)
| |
எல்லோரும்
மகிழ்ச்சி யடைதல் |
| 1134. |
ஆசி னன்குணத்
தயோத்தியர் வேந்தனும் அணங்கும்
காசி வேந்தனும் மதலையர் இருவரும் களித்துக்
கூசி மெய்ம்மயிர் பொடித்திடக் கொண்டனர் புளகம்
வீசி யோங்கிட இறைஞ்சினார் அவசமே வினரால். |
(இ
- ள்.) ஆசு இல் நன் குணத்து அயோத்தியர் வேந்தனும்
அணங்கும் - குற்றம் இல்லாத நற்குணங்களையுடைய அயோத்தி
மன்னனும் சந்திரமதியும், காசி வேந்தனும் மதலையர் இருவரும் - காசி
மன்னனும் பிள்ளைகள் இருவரும், களித்துக் கூசி மெய்ம்மயிர் பொடித்திட
புளகம் கொண்டனர் - மனம் களித்துக் கூச்சம் கொண்டு உடம்பில் மயிர்
பொடிக்கப் புளகம் கொண்டனர், வீசி ஓங்கிட இறைஞ்சினார் - அப்
புளகம் மேலும் பெருகி ஓங்க வணங்கினார்கள், அவசம் மேவினரால் -
தம்மை மறந்து பரவசமடைந்தார்கள்.
|