(இ
- ள்.) ஆகம் மிசை தங்கும் மணி ஆரமும் - மார்பில்
பொருந்தியுள்ள இரத்தின மாலைகளும், அவற்றின் பாக மிசை -
அவைகளின் நடுவே, சோதி விரி பன் மணியும் மின்ன - பரந்த ஒளி
பொருந்திய பலவகையான மணிகளும் ஒளி வீச. கோகனக மங்கையொடு
கொற்றவையும் அம்பொன் வரகு வலயங்களும் மணிப் புயம் இலங்க
- செந்தாமரையிலிருக்கிற திருமகளும் வெற்று மகளும் அழகிய
பொன்னாலாகிய தோளணிகளும், அழகிய தோள்களில் விளங்க;
ஆகம்
- மார்பு. புயம் - தோள். மணி ஆரம் - முத்து மாலையுமாம்.
புயத்தல் திருமகளும் கொற்றவையும் தோள் வளை என்னும் அணியும்
விளங்கின என்க. கொற்றவை - காளி, தூர்க்கையும் ஆம். இருவரும்
வீரமங்கையர் என்பர். கோகனகம் - தாமரை, மின்ன, இலங்க என்ற
எச்சங்கள் இருந்தான் (31, கவி) என்ற வினைமுற்றைக் கொண்டு முடியும்.
(26)
100. |
சோமனை
முடித்தருள் உமாபதி சுடாத
காமனிவன் என்னஒளிர் கட்டழ கிலங்க
மாமகர குண்டலம் மணித்திருவில் வீசச்
சேமவுடை வாளதுதி ருக்கையில்இ லங்க |
(இ - ள்.)
சோமனை முடித்து அருள் உமாபதி சுடாத காமன்
இவன் என்ன - சந்திரனைத் திருமுடிமேல் அணிந்து மேன்மேலும்
கலைகள் வளர அருள்புரிந்த உமையம்மையின் நாயகனாகிய
சிவபெருமானால் எரிக்கப்படாத மன்மதன் இவன் என்று சொல்லும்படி,
ஒளிர் கட்டழகு இலங்க - ஒளி விடுகின்ற உடம்பின் அழகு விளங்க,
மாமகர குண்டலம் மணித் திருவில் வீச - பெரிய மகரகுண்டலங்கள்
மாணிக்க ஒளிபோல் சிறந்த ஒளி செய்ய, சேம உடை வாள் அது
திருக்கையில் இலங்க - காவல் செய்கின்ற உடைவாளானது அழகிய
கையில் விளங்க;
சந்திரனுக்குக் கலைகள் குறையும்படி தக்கன் சபித்தான்.
ஒளியிழந்த
சந்திரன் சிவபெருமானை அடைக்கலம் அடைந்தான். சிவபெருமான்
அவனைத் தலையிற்சூடி, மேலும்மேலும் கலைகள் வளரச் செய்தார்.
உமாபதி சுடாத காமன் இன்மையின் இல்பொருளுவமை யணி. உடைவாள்
அது - அது : பகுதிப்பொருள் விகுதி. கட்டு : யாக்கை எலும்பு நரம்பு
தசை முதலியவற்றால் கட்டப்பட்ட உடலுக்கு ஆகுபெயர். இலங்க, வீச,
இலங்க இவைகளும் இருந்தான் (31, கவி) என முடியும்.
(27)
|
அரிச்சந்திரனுடைய
சிவபத்தி |
101. |
துடிப்படு
கரத்தனடி யர்த்தொழுது நீற்றுப்
பொடிப்பட வடுப்படு கறுப்புநுதல் பொங்க
முடித்தலை உறத்திசை முகத்தரசர் உய்த்த
வடுப்படு கறுப்பிரு மலர்க்கழல்வி ளங்க. |
(இ
- ள்.) துடிப்படு கரத்தன் - உடுக்கினை ஏந்திய கையையுடைய
சிவபெருமானின் அடியர்த் தொழுது - அடியார்களை வணங்கி வடுப்படு
|