கறுப்பு நுதல் நீற்றுப்
பொடிப்பட பொங்க - அடியார்களுடைய திருவடித்
தழும்புபட்டுக் கறுத்த நெற்றியில் திருநீற்றொளி விளங்கிப் பொங்க,
முடித்தலை, உற திசை முகத்து அரசர் உய்த்த வடுப்படு கறுப்பு -
முடியணிந்த தலைகள் பொருந்தும்படி எட்டுத் திக்கிலுமுள்ள எல்லா
அரசர்களும் காலில் விழுந்து வணங்கியதனால் உண்டாகிய வடுவாகிய
கறுப்பு, இரு மலர்க் கழல் விளங்க - இரண்டு தாமரை மலர்போலும்
திருவடிகளில் விளங்க;
அரசன்
நெற்றியில் அடியார் திருவடித் தழும்பின்மேல் திருநீற்றொளி
விளங்கியது. பாதங்களில் தன் காலில் விழுந்து வணங்கிய ஏனைய
அரசர்களின் முடித்தழும்பு விளங்கியது, உலகினை நாத முதல்
தோற்றுவிக்க இறைவன் கையில் உடுக்கு அணிந்திருக்கிறார். "தோற்றம்
துடியதனில்" - உண்மை விளக்கம். கழல் : தானியாகு பெயர். பொங்க,
விளங்க, இருந்தான் (31, கவி) என முடிக்க.
(28)
102. |
காலமது
கண்டுகதி ரும்சசியும் ஒத்தெண்
பாலளவு நீள்கதிர் பரப்புவன போலக்
கோலமுக நின்றொளி குலாவவதன் மீதே
சாலமணி மேவுமுடி நின்றொளித யங்க |
(இ
- ள்.) காலம் அது
கண்டு - சமயம் பார்த்து, கதிரும் சசியும்
ஒத்து எண் பால் அளவு நீள் கதிர் பரப்புவன போல - சூரியனும்
சந்திரனும் ஒன்றுசேர்ந்து எட்டுத்திக்கின் எல்லை முழுதும் பேரொளி
வீசுவனபோல, கோல முகம் ஒளி் நின்று குலாவ - அழகிய முகத்தில்
ஒளி நிலைபெற்று விளங்க,
அதன்
மீதே சால மணி மேவு முடி ஒளி நின்று தயங்க - அந்த
முகத்துக்குமேல் மிகுந்த இரத்தினங்கள் பொருந்திய முடியில் ஒளியானது
நிலைபெற்று விளங்க; காலம் அது - அது : பகுதிப்பொருள் விகுதி. சசி
முகத்துக்கும் கதிர் கிரீடத்திற்கும் உவவமையாயின. உவமையணியும்
எதிர்நிரல் நிறையணியும் கலந்த கலவை அணி. சசியும் கதிரும்போல
அரிச்சந்திரன் முகமும் முடியும் விளங்கின என்பது. ஒளி குலாவ, ஒளி
தயங்க இருந்தான் (31, கவி) என வினை முடிவு செய்க.
(29)
103. |
கண்ணக
நிறைந்திமை கடந்துகடை
தாவி மண்ணக மடங்கலும் அடைந்துயிர்கள் வாழ விண்ணளவு தாவிமிகு வெங்கலிக ருப்பத்
தண்ணளி நெடுங்கடல் இடம்கொடுத ழைப்ப.
|
(இ
- ள்.) தண்ணளி கண் அகம் நிறைந்து இமை கடந்து கடை
தாவி - எவ்வுயிர்க்கும் செந்தண்மையாகிய கருணையானது அருட்கண்
பார்வைகளில் நிறைந்து அடங்காது இமையைக் கடந்து கடைக்கண்
களினின்றுந் தாவி, மண்ணகம் அடங்கலும் அடைந்து - மண்ணுலகு
முழுதும் சேர்ந்து, உயிர்கள் வாழ - உயிர்கள் வாழும்படி, மிகு வெங்கலி
கரப்ப - மிகக் கடுமையான துன்பம் ஒளித்துக்கொள்ள, விண் அளவு
தாவி - பின் வானுலகு வரை சென்று, நெடுங் கடல் இடம் கொடு
தழைப்ப, பெரிய கடலின் இடமெங்கும் பரவிப் பெருக. |