பக்கம் எண் :


57

தண்ணளிநிறைந்து கடந்து தாவி, அடைந்து வாழ, கரப்ப விண்ணளவு
தாவி இடங்கொடு தழைப்ப எனக் கூட்டுக. அடங்கலும் - உம்மை :
முற்றும்மை. நெடுங்கடல் : பண்புத்தொகை. விண்ணளவும் கடலளவும்
தண்ணளி பரவியிருந்தது என்பது, தண்ணளியானது உயிர் வாழவும் கலி
கரப்பவும் மண்ணகம் அடங்கலும் அடைந்து பின் விண்ணளவு தாவி
நெடுங்கடலை இடமாகக்கொண்டு பெருக இருந்தான் (31, கவி) என
வினைமுடிவு செய்க.
                                                    (30)

 
104. வந்தெறி பயோததியின் மண்டுதிரை வானிற்
சிந்துநுரை யூடுதிகழ் செங்கதிர்க டுப்பச்
சந்தமுலை மாதாஇடு சாமரையி னூடு
சுந்தரம ணிப்பணி துலங்கிடவி ருந்தான்.

     (இ - ள்.) வந்து எறி பயோததியின் மண்டு திரை - கரையில்
வந்து மோதுகின்ற பாற்கடலின் நெருங்கிய அலைகள், வானில் சிந்தும்
நுரையூடு - ஆகாயத்தில் சிதறச்செய்கின்ற நுரைகளுக்கு ஊடே தோன்றும்,
திகழ் செங்கதிர் கடுப்ப - விளங்குகின்ற சிவந்த இளஞ் சூரியனைப்போல,
சந்த முலை மாதர் இடு சாமரையின் ஊடு - அழகிய முலைகளையுடைய
பெண்கள் வீசுகின்ற வெண்சாமரங்களின் மத்தியில், சுந்தர மணிப் பணி
துலங்கிட - அழகிய மாணிக்க அணிகள் விளங்க, இருந்தான் -
அரிச்சந்திரன் சிம்மாசனத்தில் இருந்தான்.

     பெண்கள் வீசும் வெண்சாமரையினூடு மணிப்பூண்கள் செவ்வொளி
பரப்ப வீற்றிருக்கும் அரிச்சந்திரனுக்குத் திருப்பாற்கடல் அலை வீசும்
நுரையூடு தோன்றும் இளஞ்செஞ்ஞாயிற்றை உவமை கூறலின் உவமை
அணி.

     சந்தமுலை மாதர்க்கு அலைவீசு கடலும், வெண்சாமரைக்கு அலைகள்
சிதறும் நுரைத் திவலையும், மணியணியணிந்த அரிச்சந்திரனுக்குச்
செஞ்ஞாயிறும் உவமைப்பொருத்தம் காண்க. முந்தின எட்டுச்
செய்யுள்களிலுமுள்ள வினையெச்சங்கள் இச்செய்யுளின் ஈற்றிலுள்ள
'இருந்தான்' என்னும் முற்றுவினை கொண்டு முடிந்தன.
                                                    (31)

                நகரச் சிறப்பு முற்றிற்று.
                 ஆகப் பாடல் 104.