|
| |
சிவபெருமான்
'வென்றவர் தோற்றவர் யார்?'
என வினாதல் |
| 1140. |
என்றவன்
உரைக்க இந்திரன் அவையத்
திகலிநீ அருவினை விளைத்தது
ஒன்றல பலவுண் டவற்றினால் மனத்தில்
உற்றது பெற்றிலை உலகம்
அன்றவன் அளித்தும் இன்றிது மட்டும்
அறநிலை பிழைத்திலன் அதனால்
வென்றவர் தோற்றார் யாரென விமலன்
வினாவிடக் கௌசிகன் விளம்பும். |
(இ
- ள்.) என்று அவன் உரைக்க - என்று விசுவாமித்திர
முனிவன் கூறியவுடன், இந்திரன் அவையத்து இகலி நீ அருவினை
விளைத்தது - இந்திரனுடைய அவையில் நீ வசிட்டமுனிவனுடன்
மாறுபட்டுச் செய்த அரிய வேலைகள், ஒன்று அல பல உண்டு
அவற்றினால் மனத்தில் உற்றது பெற்றிலை - ஒன்றுமட்டும் அன்று, பல
உண்டு, அவற்றால் நீ மனத்தில் நினைத்த எண்ணத்தை
நிறைவேற்றவில்லை, உலகம் அன்று அவன் அளித்தும் இன்று இதுமட்டும்
அறநிலை பிழைத்திலன் - உலகத்தை அன்று அரிச்சந்திரன் உன்னிடம்
கொடுத்தது முதல் இன்று வரை அவன் அறநெறியினின்றும்
மாறுபடாதிருக்கின்றான், அதனால் வென்றவர் தோற்றவர் யார் என
விமலன் வினாவிட - ஆதலினாலே வென்றவர் யார்? தோற்றவர் யார்?
என்று இறைவன் கேட்க, கௌசிகன் விளம்பும் - கௌசிகமுனிவன் கூறத்
தொடங்கினான்.
என்று கோசிகன்
கூறியபோது, சிவபெருமான் 'வசிட்டனும் நீயும்
பகைத்து, அரிச்சந்திரனைப் பொய்யனாக்கச் செய்த சூழ்ச்சிகள் ஒன்றும்
பயன்படவில்லை. ஆதலால், இன்று வென்றவர் யார்? தோற்றவர் யார்?
நீயே சொல்லுக!' என்று கேட்டான்.
(28)
'தோற்றவன்
நானே!' எனக் கோசிகன் கூறுதலும்,
'என்
தவத்திற் பாதியும் அரசாட்சியும் தந்தேன்' என்றலும்
| 1141. |
கோதிலாக்
குணத்தோன் நீதியும் நெறியும்
குறியும்யான் அறிகிலா திகழ்ந்தேன்
ஆதலால் வென்றோன் வசிட்டனே தோற்றோன்
அடியனே அடியனே மேனாள்
காதலாற் செய்த தவத்தினிற் பாதி
காவலன் தனக்குயான் அளித்தேன்
ஈதலால் எனக்கன் றீந்தபே ரரசும்
ஈந்தனன் என்றுரை செய்தான். |
|