|
உணர்ந்தேன் - வசிட்டமுனிவனும்
யானும் முன்பு பேசிய முறைக்கு
ஏற்றபடி உன் நீதிமுறையை ஆராய்ந்து அறிந்தேன், நின் நகர் நீயே
ஆளுதி என்ன - உன்னுடைய நகரத்தை நீயே ஆளுவாயாக என்றவுடன்,
நெடுந்தகை மறித்தும் மறுத்தனன் - மன்னன் மறுபடியும் மறுத்துப்
பேசினான்.
'நான்
கூறிய வஞ்சினம் முடிப்பதற்காகவே நாட்டை வாங்கினேன்;
அரசாள்வதற்காக வன்று; நான் தவக்கோலம் பூண்டு முனிவன் ஆனவன்;
அதற்குமுன் மன்னனாயிருந்து அரசாண்டேன். ஆதலால், இனி
உன்னுடைய நாட்டை ஆள விரும்பவில்லை' என்ற கருத்துத் தோன்ற,
'மீண்டும் மன்னன் ஆக வல்லனோ!' என்றான் கோசிகன்.
(32)
| |
மன்னவன்
மீண்டும் மறுத்தல் |
| 1145. |
வேதியர்க்
காளாய் மின்னையும் மைந்தன்
தன்னையும் விற்றனன் யான்போய்ச்
சாதியிற் கீழாம் புலையனுக் காளாய்ச்
சவஞ்சுடு காடுகாத் திருந்தேன்
சோதிமண் டபத்தின் மணித்தவி சேறிச்
சுடர்முடி கவித்துமண் புரக்க
நீதியன் றென்றே யானர சளித்தேன்
நினக்கதே எனக்கிதே என்றான். |
(இ - ள்.) வேதியர்க்கு ஆளாய்
மின்னையும் மைந்தன்
தன்னையும் விற்றனன் - மறையவனுக்கு அடிமையாக என் மனைவியையும்
மைந்தனையும் விற்றேன், சாதியில் கீழாம் புலையனுக்கு ஆளாய் யான்
போய் சவம் சுடு காடு காத்து இருந்தேன் - சாதியில் கீழான புலையனுக்கு
அடிமையாக யான் சென்று பிணங்களைச் சுடுகின்ற சுடுகாட்டைக்
காத்துக்கொண்டு இருந்தேன், சோதி மண்டபத்தின் மணித் தவிசு ஏறி
சுடர் முடி கவித்து மண் புரக்க - ஒளிமிக்க அரச மண்டபத்தில் மணிகள்
பதித்த அரியணையில் ஏறி ஒளிவீசும் முடியினைக் கவித்துக்கொண்டு
இம் மண்ணுலகைப் பாதுகாக்க, நீதி யன்று என்றே யான் அரசு
அளித்தேன் - நீதிமுறைன்று என்று கருதி யான் அரசாட்சியைக்
கொடுத்தேன், நினக்கு அதே எனக்கு இதே என்றான் - உனக்கு அதுவே
உரியது எனக்கு இதுவே உரியது என்றான்.
'என்னுடைய நாடும் அரசும் உனக்கே யுரியவையாம்;
உன்னால்
எனக்குத் தரப்பட்ட இப் புலைத்தொழிலாகிய இவ் வாழ்வே எனக்குத்
தக்கதாம்' என்பது கருத்து.
(33)
| 1146. |
ஆமதே
யெனக்குச் சுடலைகாத் திருப்ப
தவனிகாத் திருப்பதற் கங்ஙன்
போமதே நினக்குத் தொழிலென மறுத்துப்
புரவலன் உரைப்பது கேளா |
|