|
வாமமே கலையாள்
தனைவிலை கொண்டு
மறையவ னாகியாண் டுறைந்த
தூமகே துவுங்கங் காளனார் திருமுன்
தோன்றிநின் றினையன சொல்வான். |
(இ
- ள்.) சுடலை காத்திருப்பது எனக்கு ஆமதே - சுடலையைக்
காத்துக்கொண்டிருப்பதுவே எனக்குத் தக்கது, அவனி காத்திருப்பதற்கு
அங்ஙன் போமதே நினக்குத் தொழில் - மாநிலத்தைக் காப்பதற்கு
அங்குச் செல்வதே உனக்கு உரிய தொழிலாகும், என மறுத்துப் புரவலன்
உரைப்பது கேளா - என்று மறுத்து மன்னன் உரைத்த மொழிகளைக்
கேட்டு, வாம மேகலையாள் தனை விலை கொண்டு மறையவன் ஆகி
ஆண்டு உறைந்த - அழகிய மேகலையை அணிந்த சந்திரமதியை
விலைக்குப் பெற்று வேதியனாகி அங்குத் தங்கிய, தூமகேதுவும்
கங்காளனார் திருமுன் தோன்றி நின்று இனையன சொல்வான் -
நெருப்புக்கடவுளும் சிவபெருமான் திருமுன் தோற்றமளித்து நின்று பின்
வரும் மொழிகளைக் கூறினான்.
தூமகேது
- நெருப்பு; தீத்தெய்வம் அரசன் கூறிய மொழிகளைக்
கேட்டு அக்கினிபகவான் அங்கு வந்தான் என்பது. அவன் காசியில் ஒரு
மறையவனாக வந்திருந்து அரிச்சந்திரன் மனைவியையும் தேவதாசனையும்
விலைக்கு வாங்கியவன். அவன் கூறுகிறான்.
(34)
|
சந்திரமதியை
விலைக்குக் கொண்ட மறையவன்
(தீக்கடவுள்)
கூறுதல்
|
1147. |
என்னைநீ
யுரைத்தாய் எனக்குவிற் றதுவும்
இகழ்ச்சியோ இவள்விலை படுதல்
முன்னமே யுணர்ந்து கொள்வதற் கிசைந்து
முதுமறைக் குலத்துவந் துதித்து
மின்னையும் மைந்தன் தன்னையும் விற்க
விலைகொண்ட ஆவணம் ஈதென்(று)
அன்னைபங் காளன் திருமுனே வைத்தான்
அரசனும் அதிசயம் உற்றான். |
(இ - ள்.) என்னை நீ உரைத்தாய்
எனக்கு விற்றதுவும்
இகழ்ச்சியோ - நீ என்ன கூறினாய்! எனக்கு உன் மனைவியாகிய
சந்திரமதியையும் மைந்தனாகிய தேவதாசனையும் விற்றதும் இகழத் தக்க
செயலாகுமோ?, இவள் விலை படுதல் முன்னமே உணர்ந்து - இவள்
விலைக்கு விற்கப்படுதலை முன்னரே தெரிந்துகொண்டு, கொள்வதற்கு
இசைந்து - வாங்குவதற்கு மனம் விரும்பி, முது மறை குலத்து வந்து
உதித்து - பழைமையான மறையவர் குலத்தில்வந்து தோன்றி, மின்னையும்
மைந்தன் தன்னையும் விலை கொண்ட ஆவணம் ஈது என்று -
சந்திரமதியையும் தேவதாசனையும் விலைக்கு வாங்கிக்கொண்டதற்கு
எழுதிய விற்பனைச் சீட்டு இது என்று, அன்னை பங்காளன் திருமுனே
வைத்தான் - உமாதேவியை இடப்பாகத்திலுடைய சிவபெருமான் திருமுன்
வைத்தான், அரசனும் அதிசயம் உற்றான் - மன்னன் அதனைக் கண்டு
வியப்பு அடைந்தான்.
|