'உன்
மனைவி மைந்தனை ஒரு மறையவனுக்கு விற்றதாகவும்,
அதனை இழிவாகவும் கூறினை! நானே மறையவனாக வந்து விலைக்கு
வாங்கினேன்! நீ எழுதிக்கொடுத்த ஆவணம் இது காண்! தீத் தெய்வமாகிய
எனக்கு விற்றதும் இழிவாகுமோ? உயர்வாகும்!' என்று உண்மையை
விளக்கினன் அக்கினிபகவான்.
(35)
|
வீரவாகு
இயமனாக வெளிப்படல் |
1148. |
காலனவ் வளவிற்
கருங்கடா வேறிக்
கருமுகிற் கப்புவிட் டனைய
கோலமுஞ் சிவந்த கண்களும் நிவந்த
குஞ்சியுங் குண்டலக குழையும்
சூலமுங் கால தண்டமும் பணைத்த
தோள்களும் மார்பமும் துலங்க
மூலமாம் முதலை நோக்கிவீழ்ந் திறைஞ்சி
முகமலர்ந் தரசன்முன் மொழிவான். |
(இ - ள்.) காலன் அவ்வளவில்
கருங்கடா ஏறி - இயமன்
அந்த வேளையில் கருமையான எருமைக்கடாவின்மேல் ஏறிக்கொண்டு,
கருமுகில் கப்பு விட்ட அனைய கோலமும் - கரிய மேகமானது
கிளைவிட்டு வளர்ந்தது போன்ற கை கால்களுடன் கூடிய வடிவும், சிவந்த
கண்களும் நிவந்த குஞ்சியும் குண்டலக் குழையும் - சிவப்புநிறமான
கண்களும் நீண்ட தலைமயிரும் குண்டலமாகிய காதணிகளும், சூலமும்
கால தண்டமும் பணைத்த தோள்களும் மார்பமும் துலங்க - சூலாயுதமும்
காலதண்டம் என்னும் கருவியும் பருத்த தோள்களும் மார்பும் விளங்க,
மூலமாம் முதலை நோக்கி வீழ்ந் திறைஞ்சி முகம் மலர்ந்து அரசன் முன்
மொழிவான் - உலகங்களுக்கெல்லாம் மூலகாரணமாயும் முதற்பொருளாயும்
உள்ள சிவபெருமானை நோக்கி வீழ்ந்து வணங்கிப் பின்பு
முகமலர்ச்சியுடன் அரசன்முன் மொழியத் தொடங்கினான்.
அப்பொழுது இயமன் எருமைக் கடாவிலேறி வந்து நின்று
தன்
வரலாற்றை விளக்குகின்றான் சிவபெருமான் திருமுன்னா என்பது.
(36)
|
இயமன்
கூற்று |
1149. |
அலைகடற்
புவியில் புலையருக் கடிமை
யாவையென் பதுமுதல் அறிந்து
புலையனாய்ப் பிறந்து கொண்டவன் யானே
பொறித்துநீ தந்தஆ வணமீ(து)
இலைகுலாந் தொடையாய் இருந்துநீ காத்த
ஈமமும் யாகசா லைகள்காண்
தொலைவிலா வடுவென் றுணரின்நீ இகழ்ந்த
சுடலையைப் பாரென உரைத்தான். |
|