(இ
- ள்.) அலை கடல் புவியில் புலையருக்கு அடிமை யாவை
என்பது முதல் அறிந்து - அலைகளையுடைய கடலால் சூழப்பெற்ற இப்
பூமியில் புலையர் ஒருவருக்கு அடிமையாவாய் என்பதனை முதலில்
அறிந்து, புலையனாய்ப் பிறந்து கொண்டவன் யானே - புலையனாகப்
பிறந்து உன்னை விலைக்கு வாங்கியவன் எமனாகிய யானே, பொறித்து நீ
தந்த ஆவணம் ஈது - நீ எழுதிக்கொடுத்த முறிச்சீட்டு இது, இலை
குலாம் தொடையாய் நீ இருந்து காத்த ஈமமும் யாகசாலைகள் காண் -
மணம் வீசும் இலைகள் கலந்து கட்டிய மாலையை அணிந்த மன்னனே!
நீ இருந்து பாதுகாத்த சுடுகாடும் யாகசாலைகளே ஆகும். தொலைவு இலா
வடு என்று உணரின் நீ இகழ்ந்த சுடலையைப் பார் என உரைத்தான் -
அழியாத பெரும்பழி என்று நீ நினைத்தால் நீ இகழ்ந்து பேசிய
சுடுகாட்டைப் பார் எனக் கூறினான்.
இயமன்
அரிச்சந்திரன் நோக்கி 'ஒரு புலையனுக்கு நீ அடிமை
யாவாய் என்பதை முன்னரே யுணர்ந்து, நானே புலையனாய் வந்து இந்
நகரிற் சுடலை காத்திருந்தேன்! எனக்கே நீ விலைப்பட்டாய்! உன்
ஆவணச்சீட்டு இது பார்! சுடுகாடு வேள்விச்சாலையாக இருப்பது பார்!
இதனால் இழிவில்லை; நீ வருந்தாதே!' என்றனன்.
(37)
|
சுடுகாடு
பூஞ்சோலை ஆகியது |
1150. |
ஆவணம் இரண்டும்
கண்டுதம் மெழுத்தே
யாமென வறிந்துமெய்ம் மகிழ்ந்து
கேவணக் கிரண மணிமுடி துளக்கிக்
கிலேசமும் பீடையும் அகற்றி
காவண நிழலிற் கழுகெழுந் தோங்கும்
கனற்புகைச் சுடலையைப் பார்த்தான்
பூவணங் குறையும் பொய்கையும் வாசப்
பொழிலுமாய்ப் பொலிந்ததை அன்றே. |
(இ - ள்.) ஆவணம் இரண்டும் கண்டு
- விலை ஓலை
இரண்டையும் பார்த்து, தம் எழுத்தே ஆம் என அறிந்து மெய் மகிழ்ந்து
- தாம் எழுதிக்கொடுத்த எழுத்தே ஆகும் என்று அறிந்து உடம்பு
பூரித்து, கேவண கிரண மணி முடி துளக்கி - பதித்த ஒளிபொருந்திய
மணிகளையுடைய முடியணியும் தலையை அசைத்து, கிலேசமும் பீடையும்
அகற்றி - மனக்கவலையையும் தம்மைப் பிடித்த பீடைகளையும் நீக்கி
விட்டு, காவண நிழலின் கழுகு எழுந்து ஓங்கும் கனல் புகை சுடலையைப்
பார்த்தான் - பந்தலிட்ட நிழல்போல் கழுகுகள் பறந்து நிழல் தந்த
நெருப்பும் புகையும் நிறைந்து முன்னிருந்த சுடலையைப் பார்த்தான், பூ
அணங்கு உறையும் பொய்கையும் வாசப் பொழிலுமாய்ப் பொலிந்ததை
அன்றே - தாமரை மலரில் வாழும் திருமகள் தங்கிய குளங்களும் மணம்
வீசும் சோலைகளுமாய் அவ்விடம் காட்சியளித்தது.
அரிச்சந்திரன் யமன் கூறியது கேட்டுச் சுடலையை
நோக்கினான்.
அது பொய்கையும் பூஞ்சோலையும் சூழ்ந்த ஓரிடமாகத் தோன்றியது
அப்போது!
(38)
|