1151. |
வாயெலாம்
யாக மரமெலாம் யூபம்
வானெலாம் ஆகுதித் தூமம்
தீயெலாம் முத்தீ திசையெலாம் தருப்பை
தீப்படு விறகெலாஞ் சமிதை
பேயெலாம் முனிவோர் பேச்செலாம் வேதம்
பிணமெலாம் அதற்கமை பசுக்கள்
ஆயவா றெல்லாம் நோக்கினான் தொல்லை
அமைந்ததே ஈதென அமைந்தான். |
(இ
- ள்.) வாய் எல்லாம் யாகம் - அவ்விடங்கள் எல்லாம்
வேள்வி நிலையங்கள், மரமெல்லாம் யூபம் - அங்குள்ள மரங்களெல்லாம்
வேள்வித் தூண்கள், வானெலாம் ஆகுதித் தூமம் - வானம் முழுவதும்
வேள்வி செய்யும் புகை, தீயெல்லாம் முத்தீ - அங்குள்ள
நெருப்பெல்லாம் வேள்வி செய்கின்ற (ஆகவனீயம், காருகபத்தியம்,
தென்றிசையங்கி என்னும்) மூவகை நெருப்புகள், திசை எலாம் தருப்பை
- நான்கு திசைகளிலும் தருப்பைப் புற்கள், தீப் படு விறகெலாம் சமிதை
- அங்கு நெருப்பு மூட்டுகிற விறகுகள் எல்லாம் சமித்துகள், பேயெலாம்
முனிவோர் - அங்கு வாழும் பேய்களெல்லாம் முனிவர்கள், பேச்சு
எலாம் வேதம் - அங்குப் பேசப்படும் மொழிகளெல்லாம் மறை
மொழிகள், பிணமெலாம் அதற்கு அமை பசுக்கள் - பிணங்களெல்லாம்
அவ் வேள்விக்கு ஏற்ற பசுக்களாம், ஆய வாறு எல்லாம் நோக்கினான்
- அங்ஙனம் அமைந்தவற்றையெல்லாம் மன்னன் பார்த்தான், தொல்லை
அமைந்ததே ஈது என அமைந்தான் - இந்த வேள்விச்சாலை முன்னரே
அமைந்ததுதான் என்று மனத்தில் எண்ணினான்.
அரிச்சந்திரன்
சுடுகாடு முழுவதும் வேள்விச்சாலையாகத் தோன்றக்
கண்டான். 'முன்னர் வேள்விச்சாலையாய் இருந்த இடந்தான்போலும்!
நமக்காகச் சுடலையாக்கி எமன் காத்திருந்தான்போலும்!' என்று
கருத்துட்கொண்டான்.
(39)
|
சிவபெருமான்
அரிச்சந்திரனுக்கு ஆணையிடல் |
1152. |
ஆங்கவன்
தன்னைப் பாங்குடன் நோக்கி
அரசநீ அயோத்தியின் அணுகித்
தீங்கற மகுடஞ் சூட்டிஇம் முனிவன்
செய்தவம் பாதியும் கொண்டு
வாங்குநீர் உலகம் பொதுவறப் புரந்து
வருதியெம் பதத்தினில் என்னாத்
தேங்கமழ் சடையான் திருவுள மகிழ்ந்து
தேவர்கோ மாற்குரை செய்வான். |
(இ - ள்.) தேம் கமழ் சடையான்
திருவுளம் மகிழ்ந்து - தேன்
மணம் வீசுகின்ற சடையினையுடைய சிவபெருமான் மனம் மகிழ்ந்து,
ஆங்கு அவன் தன்னைப் பாங்குடன் நோக்கி - ஆங்கு அம் மன்னனை
விருப்பத்துடன்
|