பார்த்து, அரச நீ
அயோத்தியின் அணுகி - அரசனே! நீ
அயோத்திமாநகரத்தை அடைந்து, தீங்கு அற மகுடம் சூட்டி - குற்றம்
நீங்க மகுடம் சூட்டிக்கொண்டு, இம் முனிவன் செய் தவம் பாதியும்
கொண்டு - இந்த விசுவாமித்திரமுனிவன் செய்த தவத்திற் பாதியைக்
கைக்கொண்டு, வாங்கு நீர் உலகம் பொதுவறப் புரந்து - வளைந்த
கடலாற் சூழப்பட்ட இம் மண்ணுலகத்தைப் பிறர்க்குப் பொதுவன்று
என்னும்படி சிறப்பாக ஆண்டு, வருதி எம் பதத்தினில் என்னா -
முடிவில் எம்முடைய பதத்திற்கு வருவாயாக என்று கூறி விட்டு, தேவர்
கோமாற்கு உரை செய்வான் - தேவர் தலைவனாகிய இந்திரனை
நோக்கிப் பின் வருமாறு கூறினான்.
சிவபெருமான்
அரிச்சந்திரனை நோக்கி 'இச் செயல்கள் யாவும்
நின்னைச் சோதிப்பதற்குச் செய்தனவே! தெய்வங்கள் வந்து உன்னையும்
உன் மனைவி மைந்தனையும் விலைக்கு வாங்கினர்போலும்! ஆதலால்,
இழிவுனக்குச் சிறிதும் இல்லை; நீ முன்னிருந்தபடியே அரசு புரிக!'
என்றான்.
(40)
|
சிவபெருமான்
இந்திரனுக்கு ஆணை தருதல் |
1153. |
காரணம் ஒன்று
கேட்டியால் நீயும்
காசிபன் முதல்முனி வரரும்
வாரண வாசி மன்னனும் அயோத்தி
மன்னவன் தன்னுடன் ஏகித்
தோரண வீதித் திருநகர் புகுந்து
சுடர்முடி சூட்டிய பின்னர்
ஊரணைந் திடுகென் றுரைத்திட வணங்கி
உவகையால் அன்னவர் உரைப்பார். |
(இ - ள்.) காரணம் ஒன்று கேட்டியால்
- இந்திரனே!
உனக்குச் சொல்லும் காரியம் ஒன்றைக் கேட்பாயாக, நீயும் காசிபன்
முதல் முனிவரரும் - நீயும், காசிபன் முதலான முனிவர்களும், வாரண
வாசி மன்னனும் அயோத்தி மன்னவன் தன்னுடன் ஏகி - காசி நகரத்து
மன்னனும் அயோத்தி நகரத்து அரசனாகிய அரிச்சந்திரனுடன் சென்று,
தோரண வீதி திருநகர் புகுந்து - தோரணங்கட்டிய வீதிகளையுடைய
அழகிய அயோத்தி மாநகரத்தையடைந்து, சுடர்முடி சூட்டிய பின்னர் -
அரிச்சந்திரனுக்கு ஒளிவீசும் முடியினைச் சூட்டிய பிறகு, ஊர்
அணைந்திடுக என்று உரைத்திட - உங்கள் ஊரினைச் சேர்வீர்களாக
என்று கூறியவுடன், வணங்கி உவகையால் அன்னவர் உரைப்பார் -
வணக்கஞ் செய்து மகிழ்ச்சியினால் இந்திரன் முதலானவர் கூறத்
தொடங்கினர்.
சிவபெருமான் இந்திரனை நோக்கி 'நீயும் காசிபன்
முதலிய
முனிவர்களும் காசிநகர் மன்னனும் அரிச்சந்திரனுடன் அயோத்திக்குச்
சென்று அவனுக்கு முடி சூட்டிவிட்டுப் பின் உங்களூர் செல்லுங்கள்'
என்று ஆணை தந்தனர்.
(41)
|