|
சிவபெருமான்
ஆணையையேற்று அடிபணிதல் |
1154. |
திங்கள்மே
வியசெஞ் சடைமுடி யாய்நின்
திருவுளத் தின்படி யல்லால்
எங்களமாட் சிமைவே றிலையென அளித்த
ஏவல்தந் தலைமிசைக் கொண்டார்
அங்கண்மா ஞாலம் அகன்றெழுந் தீசன்
அணிதிகழ் கயிலையிற் புக்கான்
செங்கண்மால் ஏகிப் பாற்கடல் புகுந்தான்
திசைமுகன் தனதுல கடைந்தான். |
(இ
- ள்.) திங்கள் மேவிய செஞ்சடை முடியாய் - திங்களை
அணிந்த சிவந்த சடைமுடியுடைய இறைவனே!, நின் திருவுளத்தின் படி
அல்லால் - உன் மனக்கருத்தின்படி யல்லாமல், எங்கள் மாட்சிமை வேறு
இலை என்ன - எங்கள் பெருமை வேறு இல்லை என்று, அளித்த ஏவல்
தம் தலைமிசைக் கொண்டார் - இறைவன் அளித்த ஏவலைத் தம்முடைய
தலையின்மேல் கொண்டார்கள், அம் கண் மா ஞாலம் அகன்று எழுந்து
ஈசன் அணி திகழ் கயிலையில் புக்கான் - அழகிய இடமகன்ற இம்
மண்ணுலகத்தை விட்டு நீங்கிச் சிவபெருமான் அழகிய கயிலைமலையை
அடைந்தான், செங்கண் மால் ஏகிப் பாற்கடல் புகுந்தான் - சிவந்த
கண்களையுடைய திருமால் சென்று பாற்கடலிலே புகுந்தான், திசைமுகன்
தனது உலகு அடைந்தான் - நான்கு முகங்களையுடைய அயன் தன்
பிரமலோகத்தை அடைந்தான்.
சிவபெருமான்
ஆணையை ஏற்று இந்திரன் அயோத்திக்குச்
சென்றான்; திருமால் திருப்பாற்கடலுக்குச் சென்றான்; பிரமன் அவனுலகம்
புகுந்தான்; சிவபெருமானும் கயிலைக்குச் சென்றார் என்பது.
(42)
|
அறுசீர்க்கழி
நெடிலடி ஆசிரியவிருத்தம் |
1155. |
கருத்தினின்
மகிழ்ச்சி யோங்கக் கடவுளர் ஏவல் மாறா(து)
அருத்திகொண் டேகித் தத்தஞ் சார்பினில் அடைந்த பின்னர்
வருத்தமும் வினையும் மாற்றி மன்னனை மகுடஞ் சூட்டி
இருத்திநாம் போவோம் என்னா இந்திரன் இனிதி ருந்தான். |
(இ - ள்.) கடவுளர் கருத்தினில்
மகிழ்ச்சி ஓங்க ஏவல் மாறாது
- தேவர்கள் மனத்தில் மகிழ்ச்சியுடையவர்களாய் இறைவன் இட்ட
கட்டளையை மாறாமல், அருத்தி கொண்டு ஏகி தத்தம் சார்பினில்
அடைந்த பின்னர் - விருப்பங்கொண்டு சென்று தங்கள் தங்களுடைய
இருப்பிடங்களில் சேர்ந்த பிறகு, இந்திரன் மன்னனை வருத்தமும்
வினையும் மாற்றி மகுடஞ் சூட்டி இருத்தி - இந்திரன் அரிச்சந்திர
மன்னனுக்கு உண்டான வருத்தத்தையும் தீவினைகளையும் நீக்கிவிட்டு
முடிசூட்டி அரியணையில் இருக்கச்செய்து, நாம் போவோம் என்னா இனிது
இருந்தான் - நாம் பிறகு செல்லுவோம் என்று இனிமையாக இருந்தான்.
|