இந்திரன்
'அரிச்சந்திரனுக்கு முடிசூட்டுவித்துப் பின் செல்லலாம்'
என்று தங்கினன்; தேவர்களும் ஆங்கிருந்தனர் என்க.
(43)
|
காசியில்
இந்திரன் முதலிய தேவர்கள் தங்குதல் |
1156. |
காசிபன்
பிருகு ரோமன் கௌதமன் பரத்து வாசன்
கோசிகன் வசிட்டன் சன்னு குறுமுனி மரீசி யாதி
ஆசில்நா ரதன்ம தங்கன் அத்திரி முதலோர் சூழக்
காசியில் இனிதி ருந்தார் கழிந்தது கங்குற் போது. |
(இ - ள்.) காசிபன் பிருகு ரோமன்
கௌதமன் பரத்துவாசன் -
காசிப முனிவரும் பிருகு ரோமன் கௌதமன் பரத்துவாசன் என்னும்
முனிவர்களும், கோசிகன் வசிட்டன் சன்னு குறுமுனி மரீசி -
விசுவாமித்திரன் வசிட்டன் சன்னு முனிவன் குறுமுனி மரீசி
முதலானவர்களும், ஆசு இல் நாரதன் மதங்கன் அத்திரி முதலோர் சூழ
- குற்றமில்லாத நாரதன் மதங்கன் அத்திரி முதலானவர்களும் ஒன்று
சேர்ந்து, காசியில் இனிது இருந்தார் கழிந்தது கங்குல் போது - காசிமா
நகரத்தில் மகிழ்ந்து இருந்தனர்; இரவுப்பொழுது நீங்கியது.
காசிபன் முதலிய முனிவர்களனைவரும் காசிநகரில்
அன்றிரவு
தங்கினர்; இரவு விடிந்தது.
(44)
|
அனைவரும்
அயோத்திக்குப் புறப்பட்டுச் செல்லுதல் |
1157. |
கழிந்தது
கங்குற் போது கழிதலும் காசி வேந்தன்
மொழிந்தனன் விரைவின் அந்த முரட்படை எழுக என்னாச்
செழுந்தட முரசம் எங்கும் அறைந்திடத் திசைகள் தோறும்
எழுந்தன தேரும் மாவும் யானையுஞ் சேனை தானும். |
(இ
- ள்.) கழிந்தது கங்குல் போது - இரவுப்பொழுது நீங்கியது,
கழிதலும் காசி வேந்தன் விரைவின் அந்த முரண் படை எழுக என்னா
மொழிந்தனன் - இரவுப்பொழுது நீங்கியவுடன் காசிநகரத்துமன்னன்
விரைவாகத் தன்னுடைய வலிய படைகளெல்லாம் புறப்படுக என்றான்,
செழுந் தடம் முரசம் எங்கும் அறைந்திட - வளமான பெரிய முரசங்கள்
எங்கும் ஒலிக்க, தேரும் மாவும் யானையும் சேனை தானும்
திசைகள்தோறும் எழுந்தன - தேரும் குதிரையும் யானையும் சேனைகளும்
திசைகளில் எல்லாம் எழுந்தன.
காலையிற்
காசி மன்னன் தன் படைகள் அயோத்தி நகருக்குப்
புறப்படவேண்டும் என்று பறையறைவித்தான். யானை முதலிய சேனைகள்
எழுந்தன என்க.
(45)
1158. |
கரிபரி யீட்டத்
தோடும் கணமணித் தேரும் தாரும்
தெரிவையர் குழாமும் செம்பொற் சிவிகையும் கவிகை தானும்
விரிபெருந் தூளி யார்க்க வெண்கொடிப் படலம் மூடச்
சரிபெருங் கடல்கள் போல்வந் தரசனைச் சார்ந்த வன்றே. |
|