பக்கம் எண் :


568

     (இ - ள்.) அந் நதி தீர்த்தம் ஆடி - அந்த யமுனை யாற்றில்
நீராடி, அணி மணி தரளம் செம்பொன் மின் அவிர் தரங்கக் கோதா
விரிதுறைத் தீர்த்தம் ஆடி - அழகிய மணிகளையும் முத்துகளையும்
செம்பொன்னையும் பெற்று ஒளிவீசி விளங்குகின்ற அலைகளையுடைய
கோதாவிரி ஆற்றில் நீராடி, பன்னதி கடந்து - பல ஆறுகளையும் கடந்து,
வெற்றிப் பகீரதன் கொணர்ந்த கங்கை நன்னதி தன்னை
விண்ணோரோடும் வந்து நண்ணினான் - வெற்றியையுடைய பகீரதன்
கொண்டு வந்த கங்கை என்னும் நல்ல ஆற்றங்கரையைத் தேவர்களோடும்
வந்து அடைந்தான்.

     யமுனையில் மூழ்கிப் பின்னர்க் கோதாவிரியைக் கண்டு அவ்
யாற்றிலும் நீராடிப் பின் பகீரதன் கொண்டுவந்த கங்கை யாற்றினை
யடைந்தார்கள். இது முன் காசியை யடுத்திருந்த கங்கை யாற்றின் ஒரு
பிரிவு எனக் கொள்க.
                                                    (53)

 
       கங்கை நதியைக் காண்டல்
1166. வேலிரு புறமும் ஈண்ட வெண்குடை மேல்நி ழற்ற
நாலிரு திசையும் தேரும் நாகமும் மாவுஞ் செல்ல
மேலிரு விசும்பைத் தூளி மறைக்கவெண் கவரிக் கற்றை
காலிரு மருங்கும் ஆர்க்கக் கங்கைமா நதியைக் கண்டான்.

       (இ - ள்.) வேல் இரு புறமும் ஈண்ட - வேற்படைகள் இரண்டு
பக்கமும் நிறைந்து நெருங்கி வரவும், வெண் குடை மேல் நிழற்ற -
வெண்மையான குடையானது மேலே நிழல் செய்யவும், நால் இரு
திசையும் தேரும் நாகமும் மாவும் செல்ல - எட்டுத் திசைகளிலும் தேரும்
யானையும் குதிரையும் செல்லவும், மேல் இரு விசும்பைத் தூளி மறைக்க
- மேலே வானத்தைத் தூசு மறைக்கவும், வெண் கவரி கற்றை கால் இரு
மருங்கும் ஆர்க்க - வெண்மையான கவரிமான் மயிர்க்கொத்தின் காற்று
இருபக்கமும் வீசவும், கங்கை மா நதியைக் கண்டான் - மன்னன் கங்கை
என்னும் பெரிய நதியைக் கண்டான்.

     அரிச்சந்திரன் வேற்படையினர் இருபுறமும் நிற்க, வெண் குடை
நிழற்றக், கவரி வீச, நாற்புறமும் சூழ்ந்த படையுடன் கங்கை நதியைக்
கண்டான்.
                                                    (54)

 
1167. அருகுவந் தணைந்து துள்ளிக் கனைத்தெழுந் தானா வன்பு
தருகுழக் கன்றைக் கண்ட தாய்முலை சுரந்த தேபோல்
நிருபனும் மாதும் சேயும் நெடுநகர் நோக்கி மீண்டு
வருவது கண்டு கங்கை மாநதி பெருகிற் றன்றே.

     (இ - ள்.) அருகு வந்து அணைந்து துள்ளி கனைத்து எழுந்து
ஆனா அன்பு தரு குழக் கன்றைக் கண்ட - அருகில் வந்து சேர்ந்து
துள்ளிக் கனைத்து எழுந்து அடங்காத அன்பு காட்டுகின்ற இளங்
கன்றைக் கண்ட, தாய் முலை சுரந்ததே போல் - தாய்ப்பசுவின் முலை
சுரந்து பெருகுவது போல, நிருபனும் மாதும் சேயும் நெடு நகர் நோக்கி
மீண்டு வருவது கண்டு - மன்னனும் அரசியும் மைந்தனும் தம்முடைய
நெடிய நகரத்தை நோக்கி