பக்கம் எண் :


571

பாதகமுனியும் பாரில் பாவமும் அகன்ற காலை - பாவம் செய்த
விசுவாமித்திர முனிவரும் இப் பூமியில் பாவமும் நீங்கிய பிறகு, பூதல
வேந்தன் வந்து புண்ணியம் பரந்ததே போல் - இம் மாநில மன்னனாகிய
அரிச்சந்திரன் வந்தபின் அவனுடைய புண்ணியம் பரந்து
விளங்கினாற்போல, சோதி மா மதியம் தோன்றித் தூநிலா விரித்தது -
ஒளிமிக்க வெண் நிலா தோன்றித் தன் நிலவு ஒளியை விரித்துப் பரவச்
செய்தது.

     கோசிக முனிவனும் அவன் செய்த தீமைகளும் அரிச்சந்திரனை
விட்டு நீங்கி அவன் ஒளியுடன் விளங்குவதுபோல, சூரியனும் அவன்
வெம்மையும் மறைந்து சந்திரன் ஒளியுடன் தோன்றினன் என்றார். இஃது
உவமையணி.
                                                    (60)

1173. மாற்கட மலையும் தேரும் வாசியும் மன்னர் தாமும்
வேற்கடற் படையுந் தோன்ற விரிந்தவெண் நிலவின் ஈட்டம்
நீற்கடல் நடுவில் தோன்றும் நிறமும்எண் டிசையும் விண்ணும்
பாற்கடல் உகாந்தங் கோத்த படியெனப் பரந்த தன்றே.

       (இ - ள்.) மால் கட மலையும் தேரும் வாசியும் - மயக்கத்தை
யுடைய மதயானைகளும் தேரும் குதிரைகளும், மன்னர் தாமும் வேல்
கடல் படையும் தோன்ற - மன்னர்களும் வேலையுடைய கடல்போற்
பரந்த சேனைகளும் தோன்றும்படி, விரிந்த வெண் நிலவின் ஈட்டம் -
விரிந்த வெண்ணிலாவின் தொகுதியானது, நீல் கடல் நடுவில் தோன்றும்
நிலமும் - நீலநிறமான கடலின் நடுவிலே தோன்றுகின்ற நிலமும், எண்
திசையும் விண்ணும் - எட்டுத்திசைகளும் வானமும் ஆகிய இடங்களில்,
பால் கடல் உகாந்தம் கோத்தபடி எனப் பரந்தது - பாற்கடலாது
ஊழிக்காலத்துப் பரவியது போலப் பரந்தது.

     நிலாவின் ஒளி பாற்கடல் பரந்ததுபோல மண்ணும் விண்ணும்
எட்டுத்திசைகளும் பரவிற்று.
                                                    (61)

 
1174. நல்லவர் மனத்தொ டர்ச்சி நல்லவர்க் குற்றதே போல்
பல்லவப் பொழிலும் ஆறும் பருமணற் பரப்பும் வெற்பும்
புல்லுமான் மரையும் தோலும் மேதியும் புள்ளும் தூரத்(து)
எல்லவர் தமக்கும் வென்ற வெண்ணிலா வெறித்த திந்து.

     (இ - ள்.) நல்லவர் மனத் தொடர்ச்சி நல்லவர்க்கு உற்றதே போல்
- நல்லவர்களுடைய மனத்தின் பண்பும் தொடர்பும் நல்லவர்களுக்கே
தோன்றுவதுபோல, பல்லவப் பொழிலும் ஆறும் - தளிர்களுடன் கூடிய
சோலையும் ஆறுகளும், பரு மணல் பரப்பும் வெற்பும் - பெரிய
மணற்பரப்பாகிய இடங்களும் மலைகளும், புல்லும் மான் மரையும்
தோலும் - மான் கூட்டங்களும் யானைகளும், மேதியும் புள்ளும் -
எருமைகளும் பறவைகளும், தூரத்து எல்லவர் தமக்குத் தோன்ற -
தூரத்தே வருகின்ற எல்லோருக்கும் புலப்படும்படி, இந்து வெண்ணிலா
எறித்தது - திங்கள் வெண்மையான நிலா ஒளியை வீசியது.