பக்கம் எண் :


572

     பூஞ்சோலையும் யாறும் மணற்பரப்பும், மலையும் புல்லும் மானும்
மரையும் யானையும் எருமையும் பறவைகளும் எல்லாருக்குந் தோன்றுமாறு
நிலவொளி விரிந்தது. நல்லவர் மனத்தொடர்பு நல்லவர்க்குத் தோன்றுவது
போல என்பது உவமை.
                                                    (62)

 
1175. நிரந்தரம் வயிரந் துப்பு நித்திலம் பச்சை நீலம்
பரந்தசெம் மணியும் முந்தும் பகீரதி யாற்றை நோக்கிச்
சிரந்தனைத் துளக்கி மேன்மேல் அணிமயிர் சிலிர்க்க வைவேல்
புரந்தரன் மகிழ்ச்சி கூர்ந்து புலோமசைக் குரைப்பா னானான்.

       (இ - ள்.) வயிரம் துப்பு நித்திலம் பச்சை நீலம் பரந்த செம்
மணியும் - வயிரம் பவழம் முத்து பச்சை நீலம் பரந்த ஒளிவீசுகின்ற
மாணிக்கம் ஆகியவற்றை, நிரந்தரம் உந்தும் பகீரதி யாற்றை நோக்கி -
எப்பொழுதும் உந்தித் தள்ளுகின்ற கங்கையாற்றைப் பார்த்து, வை வேல்
புரந்தரன் சிரந்தனைத் துளக்கி மேன்மேல் அணி மயிர் சிலிர்க்க -
கூர்மையான வேலினையுடைய இந்திரன் தலையசைத்து மேலும்மேலும்
மெய் மயிர் சிலிர்த்து, மகிழ்ச்சி கூர்ந்து புலோமசைக்கு உரைப்ப தானான்
- மனம் மகிழ்ந்து இந்திராணியை நோக்கிப் பின் வருமாறு கூறினான்.

     இந்திரன் ஒன்பதுவகை மணிகளையும் உருட்டியோடுங் கங்கையை
நோக்கினான்; பின்னர்த் தன் மங்கையை நோக்கினான்; மகிழ்ந்து பின்
வருவன கூறுகின்றான்.
                                                    (63)

 
1176. கண்ணுதல் சடையின் வீழ்ந்த கங்கையின் கரையில் வந்து
நண்ணுதல் உற்ற வேக நாகமும் பூகக் காவும்
மண்ணுல கத்தில் துன்றும் மணிகளும் புள்ளு மாவும்
விண்ணுல கத்தி லுண்டோ மெல்லியல் விளம்பு கென்றான்.

     (இ - ள்.) கண்ணுதல் சடையின் வீழ்ந்த கங்கையின் கரையில் -
நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானது சடையிலிருந்து இம்மண்ணுலகில்
வீழ்ந்த கங்கையாற்றங்கரையிலே, வந்து நண்ணுதல் உற்ற வேக நாகமும்
- வந்து பொருந்திய வேகத்தையுடைய யானைகளும், பூகக் காவும் -
பாக்குமரச் சோலைகளும், மண்ணுலகத்தில் துன்றும் மணிகளும் -
மண்ணுலகத்தில் பொருந்திய மாணிக்கம் முதலான மணிகளும், புள்ளும்
மாவும் - பறவைகளும் விலங்குகளும், விண்ணுலகத்தில் உண்டோ
மெல்லியல் விளம்புக என்றான் - விண்ணுலகத்தில் உண்டோ மெல்லிய
தன்மையுடையவளே! விளம்புவாயாக என்று கூறினான்.

     'நமது விண்ணுலகத்தில் இக் கங்கைக் கரையிலுள்ள யானையும்
கமுகஞ்சோலையும் நவமணிகளும் பலவகைப் பறவைகளும் விலங்கினங்
களும் உளவோ கூறு?' என்றான் இந்திரன்.
                                                    (64)

 
       இந்திரனும் இந்திராணியும் உரையாடல்
1177. மந்திர வானோர் கோமான் உரைத்திட மதிழ்ந்து நந்தம்
இந்திர புரத்தும் அந்தோ இச்சிறப் பில்லை என்றாள்