பக்கம் எண் :


573

சுந்தரி யுடனே கூடித் துயின்றனன் மகவான் பின்னைச்
சந்திரன் உதயம் மாறத் தரணிவந் துதயஞ் செய்தான்.

     (இ - ள்.) மந்திர வானோர் கோமான் உரைத்திட மகிழ்ந்து -
சூழ்ச்சியையுடைய வானவர் தலைவனாகிய இந்திரன் உரைக்கக் கேட்டு
இந்திராணி மகிழ்ந்து, நம் தம் இந்திரபுரத்தும் அந்தோ இச் சிறப்பு
இல்லை என்றாள் - நம்முடைய நகரத்திலும் இத்தகைய சிறப்பு இல்லை
என்று கூறிளாள், பின்னை மகவான் சுந்தரியுடனே கூடித் துயின் என்று
கூறினாள், பின்னை மகவான் சுந்தரியுடனே கூடித் துயின்றனன் -
இந்திரன் இந்திராணியுடன் கூடித் துயில் கொண்டான், சந்திரன் உதயம்
மாறத் தரணி வந்து உதயம் செய்தான் - திங்கள் தன்னொளி மழுங்கி
மறையவே கதிரவன் கீழ்த்திசையில் தோன்றினான்.

     தரணி - சூரியன்; உதயம் - இங்கு ஒளியைக் குறித்து நின்றது.
மாற - மழுங்க. சந்திரன் ஒளி மங்கச் சூரியன் ஒளியுடன் தோன்றினான்.
                                                    (65)

 
        கோமதி யாற்றினை அடைதல்
1178. மாமதி யொளிம ழுங்கி வயங்கிருள் விடிந்த காலை
போமதில் நினைவே யாயப் புலரியின் எழுந்தி ருந்து
தாமதி யாம லேகித் தடங்களும் வெற்பும் நீங்கிக்
கோமதி யாற்றின் வண்டல் குன்றிடைச் சென்றி ருந்தார்.

       (இ - ள்.) மா மதிஒளி மழுங்கி வயங்கு இருள் விடிந்த காலை
- சிறந்த திங்கள் ஒளி மழுங்கி விளங்கிய இருள் விடிந்த அப்பொழுது,
போமதில் நினைவே யாகி - அயோத்திமாநகருக்குச் செல்வதில் நினைவு
உடையவர்களாய், புலரியின் எழுந்திருந்து - பொழுது விடியுமுன்
எழுந்திருந்து, தாமதியாமல் ஏகி - காலம் தாழ்த்தாமல் சென்று,
தடங்களும் வெற்பும் நீங்கி - குளங்களையும் மலைகளையும் கடந்து,
கோமதி யாற்றின் வண்டல் குன்றிடைச் சென்றிருந்தார் - கோமதி
யாற்றினுடைய மணல்மேட்டில் சென்று தங்கினர்.

     கோமதி யாற்றங்கரையில் மணல் மேட்டில் வந்து இந்திரன் முதலிய
தேவரும் அரிச்சந்திரனும் தங்கினர்.
                                                    (66)

 
         நகர மாந்தர் எதிர் கொள்ளல்
1179. வள்ளலை முனிவன் கூட்டி வருகின்ற வாறு கேட்டுப்
பள்ளமுற் றும்பர் வெள்ளம் பாய்கின்ற பரிசே போல
உள்ளமும் மகிழ ரோமஞ் சிலிர்ப்புற ஊரிற் சேனை
வெள்ளமும் அரசர் தாமும் வியந்தெதிர் கொண்டார் அன்றே.

     (இ - ள்.) வள்ளலை முனிவன் கூட்டி வருகின்ற வாறு கேட்டு -
கொடைவள்ளல்களிற் சிறந்தவனாகிய அரிச்சந்திரனை முனிவன் அழைத்
துக்கொண்டு வருகின்ற செய்தி கேட்டு, உம்பர் வெள்ளம் பள்ளம் உற்றுப்
பாய்கின்ற பரிசே போல - மேலிடத்தில் உள்ள நீர் பள்ளத்திற்