|
தவத்திற்
பாதியைக் கோசிகன் தாரைவார்த் தளித்தல் |
1184. |
மைந்தனை
நின்னை மாதை இத்தனை வருத்தம் கண்டேம்
நிந்தனை சிறிதும் நின்பால் கண்டிலேம் நீதி வேந்தே
எந்தம்மா தவத்திற் பாதி யாவரும் காண இன்றே
தந்தனம் உனக்கே என்று கௌசிகன் தாரை வார்த்தான். |
(இ
- ள்.) மைந்தனை நின்னை மாதை இத்தனை வருத்தம்
கண்டேம் - உன் மைந்தனாகிய தேவதாசனையும் உன்னையும்
சந்திரமதியையும் இவ்வளவு துன்பம் அடையும்படி செய்தோம், நிந்தனை
சிறிதும் நின்பால் கண்டிலேம் - உங்கள்மீது சிறிதும் குற்றம் யாம் காண
வில்லை, நீதி வேந்தே - நீதிமுறைப்படி நடக்கும் மன்னனே!, எம் தம்
மாதவத்திற் பாதி யாவரும் காண இன்றே உனக்கு தந்தனம் -
எம்முடைய தவத்திற் பாதி இங்கு உள்ள யாவரும் காணும்படி இன்றே
உனக்குக் கொடுத்துவிட்டோம், என்று கௌசிகன் தாரை வார்த்தான் -
என்று கூறிக் கௌசிகமுனிவன் மன்னனிடம் நீர்த் தாரை வார்த்துக்
கொடுத்தான்.
அரசர்
முனிவர் முதலியோர் தம்மைப் பன்மை மொழியிற் கூறுதல்
நூல்வழக்கு ஆதலின் கோசிகமுனிவன் 'கண்டேம், கண்டிலேம், தந்தனம்'
எனப் பன்மை மொழியாற் கூறினான். முன்னர் இந்திரன் முன்னிலையில்
தேவருலகத்தில் கோசிகமுனிவன் வசிட்ட முனிவரிடம் கூறிய
வஞ்சினத்தின்படி தன் தவத்திற் பாதியை மன்னனுக்கு அளித்தான்.
(72)
1185. |
உற்றறிந்
தளவிட் டோரா தும்மையான் இகழ்ந்து பேசப்
பெற்றவை பொறுத்தி ரென்னா வசிட்டனுக் கினிய பேசிக்
கொற்றவன் தன்னை ஆற்றிக் குமரனை மயிலைத் தேற்றி
மற்றுமந் திரியை வாழ்த்திக் கௌசிகன் வனத்திற் போனான். |
(இ - ள்.) உற்று அறிந்து அளவிட்டு
ஓராது உம்மை யான்
இகழ்ந்தது பேசப் பெற்றவை பொறுத்திர் என்னா - உம்முடைய
பெருமைகளை அளவிட்டு ஆராயாமல் உம்மை யான் இகழ்ந்து பேசிய
மொழிகளைப் பொறுத்துக்கொள்வீராக என்று, வசிட்டனுக்கு இனிய பேசி
- வசிட்டமுனிவரைப் பார்த்து இனிய மொழிகளைக் கூறி, கொற்றவன்
தன்னை ஆற்றி - மன்னனுடைய மனத்தில் ஆறுதல் உண்டாக்கி,
குமரனை மயிலைத் தேற்றி மைந்தனையும் சந்திரமதியையும் தேறுதல்
அடையச்செய்து, மற்றும் மந்திரியையும் வாழ்த்தி - மற்றும் சத்தியகீர்த்தி
என்ற மந்திரியையும் வாழ்த்தி, கௌசிகன் வனத்திற் போனாள் -
கௌசிகமுனிவன் தவம் செய்யக் காட்டிற்குச் சென்றான்.
கோசிகன் அரிச்சந்திரன் வசிட்டன் முதலிய யாவருக்கும்
இனிய
மொழி கூறிப் பின்னர்த் தவஞ்செய்யக் கானகஞ் சென்றான்.
(73)
|
காசி
மன்னனும் அரிச்சந்திரனும் கலந்து பேசியிருத்தல் |
1186. |
தேவரும் முனிவர்
தாமும் திண்புவித் தலைவர் தாமும்
யாவரும் அகன்ற பின்னர் இணைமணிக் கவரி வீச |
|