|
மூவரும் அனைய
நீர்மை முனிவனும் காசி வேந்தும்
ஏவரும் நிகரி லானும் இனிதுரைத் துடன் இருந்தார். |
(இ
- ள்.) தேவரும் முனிவர் தாமும் திண் புவித் தலைவர் தாமும்
- தேவர்களும் முனிவர்களும் மண்ணுலக மன்னர்களும், யாவரும் அகன்ற
பின்னர் - யாவரும் விடைபெற்றுச் சென்றபிறகு, இணை மணிக் கவரி வீச
-அழகிய இரண்டு கவரி பக்கத்தில் வீச, மூவரும் அனைய நீர்மை
முனிவனும் - அயன்அரி அரன் என்னும் முத் தேவர்களைப்போன்ற
தன்மையுடைய வசிட்ட முனிவனும், காசி வேந்தும் - காசி மன்னனும்,
ஏவரும் நிகர் இலானும் - யாவரும் ஒப்பில்லாத அரிச்சந்திர மன்னனும்
இனிது, உரைத்து உடன் இருந்தார் - இனிய மொழிகள் பேசிக்கொண்டு
இருந்தனர்.
முத்தேவர்க்கு
ஒப்பாக வசிட்ட முனிவனைக் கூறுதல் வழக்காதலின்
'மூவரும் அனைய நீர்மை முனிவன்' என்றார். ஏவரும் என்பது
வினாப்பெயர். ஏ : என்பது பகுதி; நிகர் இலான் : வினையாலணையும்
பெயர்.
(74)
|
காசி
மன்னன் கோசிகன் வரலாறு கூறுமாறு
வசிட்டனை
வேண்டுதல்
|
1187. |
இருந்தபின்
காசி வேந்தன் வசிட்டனை இறைஞ்சி ஏத்தி
அருந்தவர் தம்பால் ஐய அறமலால் மறமும் உண்டோ
வருந்திட இவர்பால் இந்த வன்கண்மை செய்ய உள்ளம்
பொருந்திய வாறே தென்ன வசிட்டனும் புகல லுற்றான். |
(இ - ள்.) இருந்த பின் காசி
வேந்தன் வசிட்டனை இறைஞ்சி
ஏத்தி - மூவரும் இருந்த பின்பு காசி மன்னன் வசிட்டமுனிவனை
வணங்கி வழிபட்டு, அருந்தவர் தம்பால் ஐய அறம் அலால் மறமும்
உண்டோ - அரிய தவமுனிவரிடத்து ஐயனே! அறக்குணமாகிய
அருட்குணம் அல்லாமல் பாவத்திற்குரிய தீய பண்பும் உண்டாகுமோ?,
வருந்திட இவர்பால் இந்த வன்கண்மை செய்ய - வருந்தும்படி
இவர்களிடத்தில் இந்தக் கொடுமை செய்வதற்கு, உள்ளம் பொருந்திய
வாறு ஏது என்ன - மனம் பொருந்தியதற்குக் காரணம் யாது? என்று
கேட்டபோது, வசிட்டனும் புகலல் உற்றான் - வசிட்ட முனிவன் விடை
கூறத் தொடங்கினான்.
'முனிவர் அருட்குணம் உடையவர்; ஆதலின், அறச்செயல்களே
அவர்பால் இருத்தல் வேண்டும். அங்ஙனம் அன்றி மறச்செயல்
(பாவச்செயல்) கோசிக முனிவரிடத்து இருப்பதற்குக் காரணம் யாது?'
எனக் காசி மன்னன் கேட்டான்.
(75)
|
வசிட்டன்
விசுவாமித்திரன் வரலாறு கூறுதல் |
1188. |
நிலத்தியல்
பற்றே கொண்மூ நீரியல் பதனாற் றங்கள்
குலத்தியல் பெவர்க்கும் மன்னா வாழினும் கெடினும் குன்றா |
|