|
தலத்தர
சான்று நீங்கித் தவத்தனா னாலுந் தொல்லை
நலத்தது போமோ என்று நரபதிக் கினிது ரைத்தான். |
(இ
- ள்.) கொண்மூ நீர் இயல்பு நிலத்தியல்பு அற்றே - மேகத்தி
னின்று விழும் நீரின் இயல்பு தான் வீழ்ந்த நிலத்தின் இயல்புக்குத்
தக்கபடி மாறும், மன்னா - அரசனே!, தங்கள் குலத்து இயல்பு எவர்க்கும்
வாழினும் கெடினும் குன்றா - மன்னனே! தங்கள் குலத்தின் தன்மை
எவருக்கும் அவர் வாழ்ந்தாலும் வறுமையுற்றாலும் குறை யாது, தலத்து
அரசு அகன்று நீங்கி தவத்தன் ஆனாலும் - தன் நாட்டின் அரசாட்சியை
விட்டு நீங்கித் தவத்தைச் செய்பவன் ஆனாலும், தொல்லை நலத்தது
போமோ என்று நரபதிக்கு இனிது உரைத்தான் - கௌசிக முனிவனுக்குப்
பழைய தன்மைகளாகிய நன்மைகள் விட்டு நீங்குமோ? என்று காசி
மன்னனுக்கு வசிட்டமுனிவன் இனிமையாகக் கூறினான்.
'மேகத்தின்
நீர் நிலத்தொடு சேர்ந்தாலும் அந்நிலத்தின் தன்மை
மாறாதிருப்பதுபோலத் தவம் செய்யச் சென்றாலும் அரசர்தம் பண்பு
மாறுதல் அரிது' என்று வசிட்டன் கூறினன்.
(76)
1189. |
அன்னது கேட்ட
அண்ணல் அருந்தவத் தோனை நோக்கி
மன்னவன் ஆன வாறும் மாமுனி யான வாறும்
இன்னவா றின்ன வாறென் றெனக்கருள் செய்வாய் என்னப்
பொன்னணி முடியாய் கேளென் றம்முனி புகல லுற்றான். |
(இ - ள்.) அன்னது கேட்ட அண்ணல்
- வசிட்டமுனிவன்
கூறிய மொழிகளைக் கேட்ட காசி மன்னன், அருந்தவத்தோனை நோக்கி
- அரிய தவத்தினையுடைய முனிவனைப்பார்த்து, மன்னவன் ஆன வாறும்
மாமுனி ஆன வாறும் - கோசிகன் மன்னனாக இருந்தவிதமும் பெரிய
முனிவனாக ஆன விதமும், இன்னவாறு இன்னவாறு என்று - இவ்வாறு
இவ்வாறு என்று, எனக்கு அருள் செய்வாய் என்ன - எனக்குக் கூறி
யருளவேண்டும் என்று கேட்க, பொன் அணி முடியாய் கேள் என்று -
பொன்னாலாகிய அழகிய முடியினை உடையவனே! கேட்பாயாக என்று,
அம் முனி புகலல் உற்றான் - வசிட்டமுனிவன் சொல்லத் தொடங்கினான்.
'கோசிகன் முன்னர் அரசனாக இருந்தவாறும் பின்னர் முனிவனாகிய
வரலாறும் எனக்குக் கூறுக' என்று காசி மன்னன் கேட்ப, வசிட்டன் கூறத்
தொடங்கினான் என்பது.
(77)
மீட்சிக்
காண்டம் முற்றிற்று.
|