பக்கம் எண் :


579

10. உத்தர காண்டம்
 

      [இது காசி மன்னன் வினாவுக்கு வசிட்டன் விடை கூறியதனால்
              "உத்தர காண்டம்" எனப் பெயர்பெற்றது.]

            கோசிகன் வரலாறு

  எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1190. திசைமுழுதும் கவித்தகுடைச் செங்கோல் வேந்த
   திசைமுகத்தோன் வழிவந்த குசனென் போற்கு
வசையறுசீர்க் குசன்குசநா பன்வ தூர்த்தன்
   வசுவேன்னும் பெயருடைய மக்கள் நால்வர்
குசனுக்குக் கிரிவிரசம் என்னும் நாடும்
   குசநாபற் கரியகௌ சாம்பி நாடும்
வசுவுக்கு வசுமதியும் வதூர்த்த னுக்கு
   வாரணமென் வளநாடும் வழங்கி னானே.

       (இ - ள்.) திசை முழுதும் கவித்த குடைச் செங்கோல் வேந்த
- நான்கு திக்குகளிலும் உள்ள உயிர்களுக்கு நிழலைச் செய்கின்ற
செங்கோல் மன்னனே!, திசை முகத்தோன் வழிவந்த குசன் என்போற்கு
- நான்கு முகங்களையுடைய அயன் வழியில் தோன்றிய குசன் என்னும்
மன்னனுக்கு, வசையறு சீர்க் குசன் குசநாபன் வதூர்த்தன் வசு என்னும்
பெயருடைய மக்கள் நால்வர் - குற்றமற்ற சிறப்பினையுடைய குசன
குசநாபன் வதூர்த்தன் வசு என்னும் பெயருடைய மக்கள் நால்வர்
பிறந்தனர், குசனுக்குக் கிரிவிரசம் என்னும் நாடும் - குசன் என்பவனுக்குக்
கிரிவிரசம் என்ற நாட்டையும், குசநாபற்கு அரிய கௌசாம்பி நாடும் -
குசநாபன் என்னும் மன்னனுக்கு அருமையான கௌசாம்பி என்னும்
நாடும், வசுவுக்கு வசு மதியும் - வசு என்பவனுக்கு வசுமதி என்னும்
நாடும், வதூர்த்தனுக்கு வாரணம் என்னும் வள நாடும் வழங்கினான் -
வதூர்த்தன் என்னும் மைந்தனுக்கு வாரணம் என்ற வளமான நாட்டையும்
தந்தை கொடுத்து உதவினான்.

     குசன் என்னும் மன்னற்கு நால்வர் மக்கள். அம் மன்னன் குசன்
என்ற மகனுக்கு கிரிவிரசம் என்ற நாடும், குசநாபற்குக் கௌசாம்பியும்,
வசுவுக்கு வசுமதியும், வதூர்த்தனுக்கு வாரணமும் பகுந்து கொடுத்தான்
அரசுபுரிவதற்கு.
                                                     (1)

 
1191. அங்கவரிற் கௌசாம்பிக் குசநா பற்கே
   யைம்பதிற்றி ரட்டியெனும் அடைவிற் றோன்றும்
மங்கையர்தாம் ஒருகாவிற் புகுந்து நாளும்
   வண்டலிழைத் திடுவ ரங்கே வாயுவெய்தி