எனக் கேட்டவுடன்,
திரு அனையார் அழுது அழுது செப்ப -
திருமகளைப்போன்ற பெண்கள் அழுது அழுது சொல்ல தாதை
பிறித்துரையாது உள் ஒடுக்கி - தந்தையாகிய குசநாபன் பிரித்து வெளியிற்
சொல்லாமல் மறைத்து, சூளி மைந்தன் பிரமதத்தன் தனக்குப் பேதைமாரை
அளித்தான் - சூளி என்பவன் மைந்தனாகிய பிரமதத்தனுக்கு அப்
பெண்களை மணஞ் செய்து கொடுத்தான்.
(3)
1193. |
சூளிமகன்
பிரமதத்தன் தன்னைச் சேர்ந்து
துயர்நீங்கிச் சுகமோங்கிப் பெருவாழ் வுற்றார்
மீளியெழிற் குசநாபன் பின்பு செய்த
வேள்விதனிற் காதியெனும் வீரன் தோன்றி
ஆளிதிகழ் தவிசேறி மகுடஞ் சூடி
யரசாண்டு சிலகாலஞ் சென்ற பின்னர்
காளியைப்போற் கவுசிகையை யீன்று பின்பு
கௌசிகனைப் பெற்றெடுத்தக் காலந் தன்னில். |
(இ - ள்.) சூளி மகன் பிரமதத்தன்
தன்னைச் சேர்ந்து - சூளி
என்பவனுடைய மகனாகிய பிரமதத்தன் என்பவனுடன் கூடி, துயர் நீங்கிச்
சுகம் ஓங்கிப் பெருவாழ்வு உற்றார் - தங்கள் துன்பம் நீங்கப் பெற்றுச்
சுகம் வளரப்பெற்று நல்ல பெரிய வாழ்வு அடைந்தனர், மீளி எழிற்
குசநாபன் பின்பு செய்த வேள்விதனில் - வீரத்தன்மையுடைய அழகிய
குசநாபன் என்பவன் பின்பு செய்த வேள்வியில், காதி எனும் வீரன்
தோன்றி - காதி என்னும் பெயருடைய வீரன் தோன்றி, ஆளி திகழ்
தவிசு ஏறி மகுடம் சூடி அரசாண்டு சிலகாலம் சென்ற பின்னர் - சிங்கம்
விளங்குகின்ற அரியணையில் ஏறி முடி சூடி அரசாண்டு சிலகாலம்
சென்றபிறகு, காளியைப் போல் கவுசிகையை ஈன்று - காளியைப்போல்
விளங்குகின்ற கவுசிகை என்னும் பெண்ணைப் பெற்று, பின்பு
கௌசிகனைப் பெற்றெடுத்து அக்காலந் தன்னில் - பின்பு கௌசிகன்
என்பவனைப் பெற்றெடுத்து அக்காலத்தில்,
இச் செய்யுள் முதல் மூன்று செய்யுட்கள் குளகம்.
குளகம் : ஒரு
செய்யுள் வினை முடிவுபெறாது எச்சமாக நின்று அடுத்த செய்யுளோடு
தொடர்தல். "குளகம் பலபாட் டொருவினை கொள்ளும்" என்பது விதி.
குசநாபன் பின் வேள்விபுரிந்து அவ் வேள்வியிற் காதி என்ற வீரன்
பிறந்தான். அவன் அரசுபுரிந்து வாழ்ந்து வருநாளிற் கவுசிகை என்ற
பெண்ணும் கவுசிகன் என்ற ஆண்மகனும் பிறந்தனர்.
(4)
1194. |
இருசிகனக்
கௌசிகையைப் புணர்ந்து சின்னாள்
இன்பநுகர்ந் திருவர்தமை ஈன்ற பின்பு
பிரமனுல கணைந்துதவம் புரிந்து மீளப்
பிரிவுநினைந் தவள்புலம்ப முனிவன் சீறி
வருபுனலா றாகவெனச் சபித்த லோடும்
மானதவா வியில்வீழ்ந்து சரயு வோடே
அருகணைந்து பிரிந்திழிகோ மதியே யானாள்
அவள்நிலையீ திவனுலகம் புரக்கும் நாளில். |
|