பக்கம் எண் :


592

தெவ்வண் ணம்விளைந் திடுமென் னவிரந்
   தெழுகின் றசினந் தணிவித் துலகம்
உய்வண் ணமுறத் திரிசங் குதனக்
   குடுவின் பதம்நல் கவுரைத் தனரே.

     (இ - ள்.) அண்டம் அனைத்தும் எரித்து - இந்த உலகங்களையும்
அவற்றையுடைய அண்டங்கள் எல்லாவற்றையும் எரித்துவிட்டு, உலகம்
ஈரேழுடன் இந்திரனும் அயனும் - பதினான்கு உலகங்களுடன்
இந்திரனையும் பிரமதேவனையும், தெய்வங்களும் வேறு படைப்பன் எனா
- வேறு தெய்வங்களையும் நான் படைப்பேன் என்று கூறி நிற்க,
தேவாதிபன் மால் சிவனோடு அயன் வந்து - அப்போது தேவர்
தலைவனாகிய இந்திரனுடன் திருமாலும் சிவனும் அயனும் வந்து,
எவ்வண்ணம் விளைந்திடும் என்ன இரந்து - எவ்வாறு வந்து
விளைந்துவிடுமோ என்று எண்ணி இரந்து கேட்டு, எழுகின்ற சினம்
தணிவித்து - மேலே தோன்றி வளர்கின்ற கோபத்தைத் தணியும்படி
செய்து, உலகம் உய்வண்ணம் உற - உலகம் எல்லாம் உய்ந்து நன்மை
பெறும் விதத்தில், திரிசங்கு தனக்கு உடுவின் பதம் நல்க உரைத்தனர் -
திரிசங்கு மன்னனுக்கு வானத்தில் உள்ள விண்மீன்கள் இருக்கும்
இடமாகிய பதவியை அளிக்கும்படி கூறினார்கள்.

     கோசிகன் சினத்தினால் என்ன தீங்கு விளையுமோ என எண்ணி
அஞ்சி இந்திரன் முதலியவர்கள் வந்து சினத்தைத் தணித்துத் திரிசங்கு
மன்னனுக்கு நட்சத்திர பதவி கொடுத்தார்கள்.
                                                    (21)

 
1211. அத்தன் மையன் அம்முனி யென்னுடனே
   யந்நா ளில்எ டுத்தம றத்தொழிலால்
எத்தன் மையிழைத் தனன் அன்னவெலாம்
   என்னோ டுப லித்தில வாதலினால்
இத்தன் மைஇ ழைத்தனன் மன்னனுடன்
   இதனா லும்வெ லற்கரி தாயினனிப்
பித்தன் செயல் இத்தக வென்றறவோர்
   பெருமான் இறையோ டுரைபே சினனே.

       (இ - ள்.) அத் தன்மையன் அம் முனி என்னுடனே - அத்
தன்மைகளையுடையவன் இவ் விசுவாமித்திர முனிவன் என்னுடன்,
அந்நாளில் எடுத்த மறத் தொழிலால் - அந்த நாளில் மேற்கொண்ட வீரச்
செயல்களால், எத்தன்மை இழைத்தனன் அன்ன வெல்லாம் - என்ன
என்னவகையோ தீமைகள் செய்தான் அவை எல்லாம், என்னோடு
பலித்தில ஆதலினால் - என்னிடத்தில் பயன்படவில்லை ஆதலினாலே,
மன்னனுடன் இத்தன்மை இழைத்தனன் - மன்னனிடத்தில் இத்தகைய
செயலை மேற்கொண்டான், இதனாலும் வெலற்கு அரிது ஆயினன் -
இதனாலும் வெல்லுதற்கு அரிய தோல்வியை அடைந்தான், இப் பித்தன்
செயல் இத்தகவு என்று - இந்தப் பித்தம் பிடித்த முனிவன் செயல்
இதுவாகும் என்று, அறவோர் பெருமான் இறையோடு உரை பேசினன் -
துறவிகளிற் சிறந்த வசிட்டமுனிவன் காசி மன்னனிடத்தில் இவ்வாறு
கூறினான்.