என்
: என்ன என்பதன் தொகுத்தல். கண்டனிர் - காண். பகுதி ட் :
இறந்தகால இடைநிலை. அன் : சாரியை. இர் : முன்னிலைப் பன்மை
வினைமுற்று விகுதி. கூறுமின் : முன்னிலைப்பன்மை வினைமுற்று விகுதி.
(7)
|
முனிவர்
தம் வரலாறு கூறுதல் |
112. |
அங்கண்
மாநிலத் தரியகன் னோசிநாட் டகத்துப்
பொங்கு கண்டகி என்பதோர் புண்ணிய தீர்த்தம்
அங்கி யாம்புகுந் தாடிநின் னருண்முகங் காண
இங்கு வந்தனம் இன்னமும் கேட்டிஎன் றிசைப்பார். |
(இ - ள்.)
அம்கண் மாநிலத்து அரிய கன்னோசி நாட்டு அகத்து
பொங்கு கண்டகி என்பது ஓர் புண்ணிய தீர்த்தம் - அழகிய இடத்தை
யுடைய பெரிய பூமியில் அருமையான கன்னோசி நாட்டில் அலைகள்
பொங்குகின்ற கண்டகி என்ற ஒரு புண்ணிய நீர்நிலை உண்டு, அங்கு
யாம் புகுந்து ஆடி நின் அருள் முகம் காண இங்கு வந்தனம் - அங்கு
நாங்கள் சென்று நீராடி உனது கருணைபொழிகின்ற முகத்தைக் கண்டு
மகிழ இங்கு வந்தோம், இன்னமும் கேட்டி என்று இசைப்பார் -
இன்னமும் கேட்பாயாக என்று மேலுங் கூறுவார்கள்.
கண்டகி - மகத தேசத்திலுள்ள ஆறு. இதில் பாண
லிங்கங்களும்
சாளக்கிராமங்களும் உண்டாம். அங்கியாம் : குற்றியலிகரம்; மாநிலம் :
உரிச்சொற்றொடர் : கேட்டி : முன்னிலையேவல் வினைமுற்று. கேள் :
பகுதி. இ : முன்னிலை ஏவல் வினைமுற்று விகுதி. த் : எழுத்துப் பேறு.
"ணளமுன் டணவும் ஆகுந் தநக்கள்" என்ற விதிப்படி ற் : ட் ஆனது.
(8)
|
சந்திரவதி
தன்மை கூறுதல் |
113. |
அந்த
நாட்டினில் கன்னமா புரிநக ராள்வோன்
சந்தி ரன்வழிச் சந்திர தயன்தவம் புரிந்து
கந்த வார்சடைக் கடவுள்தன் வரத்தினால் பயந்த
தந்த மாமுலைத் தையல்சந் திரவதி என்பாள். |
(இ
- ள்.) அந்த நாட்டினில் கன்னமாபுரி நகர் ஆள்வோன்
சந்திரன் வழிச் சந்திரதயன் - அந்தக் கன்னோசி நாட்டில் கன்னமாபுரி
நகரத்தை ஆள்கின்ற சந்திரகுலத்தில் தோன்றிய சந்திரதயன் என்னும்
அரசன், தவம் புரிந்து கந்தவர் சடைக் கடவுள் தன் வரத்தினால் பயந்த
- தவஞ்செய்து மணங்கமழ்கின்ற நீண்ட சடையோடு கூடிய சிவபெருமான்
திருவருளால் பெற்றெடுத்த, தந்த மாமுலைத் தையல் சந்திரவதி என்பாள்
- யானைத்தங்களைப் போன்ற பெரிய முலைகளையுடைய பெண் சந்திரவதி
என்னும் பெயருடையவள்.
மாமுலை
: உரிச்சொற்றொடர்; சந்திரதயன் மகள் சந்திரவதி :
தத்திதாந்தகாமம்.
(9)
|